Thursday, May 29, 2014

அயர்ந்த நித்திரை - அறுவை சிகிட்சை

விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சன் முதன்முதலில் குளோரோபாமை கண்டுபிடித்தபோது பிரசவ வலியை தடுக்க நாம் இதை மயக்க மருந்தாக பயன்படுத்தலாம் என்ற ஆலோசனையை வைத்தார்.அப்போது அக்கால மத‌போதகர்கள் இல்லை இல்லை இது இயற்கைக்கு எதிரானது பிரசவ வலியை தடுத்தல் வேதாகமத்துக்கு எதிரானது என்றனர். விஞ்ஞானி ஜேம்ஸ்சிம்சனோ உடனே ஆதியாகமம் 2:21‍‍ ஐ எடுத்துக் காட்டி கர்த்தர் ஆதாமுக்கு "அயர்ந்த நித்திரையை" வரப்பண்ணி அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து கர்த்தர் ஏவாளை உருவாக்கினதை சுட்டிக்காண்பித்தார்.கடவுள் ஆதாமை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இது இப்படியிருக்க ஏவாளோ கடவுளால் வேறு விதமாக உண்டாக்கப்பட்டாள். மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என எண்ணிய கடவுள் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அப்போது அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.கடவுள் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
ஆமேன்.
முதல் மயக்கமருந்து நிபுணரும் நம் கர்த்தரே!
முதல் அறுவை சிகிட்சை நிபுணரும் நம் கர்த்தரே!!

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment