இந்த நிறுவனத்தின் CEO-வான டேன் கேத்தி (Dan Cathy) சொன்ன ஒரு கருத்து தான் இன்று அமெரிக்காவில் பிரளயமாகியிருக்கிறது. அப்படி அவர் என்னத்தான் சொல்லிவிட்டார்.
“குடும்பம் எனும் அமைப்புக்கு தான் எங்கள் முழு ஆதரவும். அது பைபிள் அடிப்படையிலான குடும்பம். எங்கள் நிறுவனம் கூட ஒரு குடும்ப நிறுவனம் தான், ஒரு குடும்பம் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனம். முதல் மனைவிகளோடேயே நாங்கள் இன்னும் வாழ்கின்றோம். அதனால் கடவுளுக்கு நன்றி. இந்த கருத்து எல்லாருக்கும் பிடிக்காது என்று தெரியும் ஆனாலும் கடவுளுக்கு நன்றி, ஏனென்றால் இந்த தேசத்தில் தான் நாம் நம் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவிலிய கோட்பாடுகள் படி வாழ முடிகின்றது” என்றார். அவ்வளவுதான்.Source
இதுதான் இன்று சர்ச்சையாகியிருக்கின்றது.மேல் சொன்ன டேன் கேத்தியின் கருத்து ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்து கொள்ளும் கூட்டத்தின் அடி மனதை தொட்டதால் இன்று இந்த பிரளயம். கொடியேந்தி இந்த ரெஸ்டாரண்டை மொத்தமாக புறக்கணிப்போம் என கிளம்பியிருக்கின்றார்கள். நேற்று அவர்கள் ஒன்று கூடி Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் முன் குழுமி ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உதடோடு உதடு முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துகொண்டார்கள். அமெரிக்காவின் பாஸ்டன் நகர மேயர் கூட எங்கள் நகருக்குள் Chick-fil-A ரெஸ்டாரண்ட் வர அனுமதிக்க மாட்டோம் என பிரகடனம் செய்துள்ளார். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.(சங்கீதம் 2:4)
சிக்-பில்-ஏ நிறுவனம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் நிறுவனர் ட்ரூயெட் கேத்தி (Truett Cathy) இதை விவிலிய கோட்பாடுகளின் படி நடத்துவதில் மிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். எடுத்துக்காட்டாக ஞாயிற்று கிழமைகளில் ரெஸ்டாரண்டுகளை திறக்காமல் இருத்தல் அதனால் குடும்பங்கள் சர்சுக்கு ஒழுங்காக செல்ல முடியும், கடன் வாங்காமல் நிறுவனத்தை நடத்துதல், வருமானத்தில் ஒரு பகுதியை சமூகநலனுக்கு அளித்தல் போன்றன. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இன்று அபரிதம். 1600 க்கும் அதிகமான ரெஸ்டாரண்டுகள் அமெரிக்காவெங்கும். வாரந்தோறும் புதிதுபுதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. கர்த்தர் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பது ஒன்றும் ஆச்சரியமல்லவே.(மல்கியா 3:10)
ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்யலாம் என உன் கருத்தை நீ சொல்ல உனக்கு அதிகாரம் இருக்கும் போது, என் கருத்தை நான் சொல்ல எனக்கு அதிகாரமில்லையா? நல்ல கதையாக இருக்கிறது.
சங்கீதம் 5:12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.
0 comments:
Post a Comment