Saturday, August 25, 2012

மற்ற ஒன்பது பேர் எங்கே?

நம் தேவன் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (சங்கீதம் 113:7). ஆனால் அதில் எத்தனை பேர் இறுதி வரைக்கும் இறைவனில் நிலைத்திருக்கிறார்கள் என்றால் மிகவும் சொற்பமே. அன்றொரு நாள் இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பது பேர் எங்கே? (லூக்கா 17:17) என்று கேட்டது போலவே இன்றைக்கும் கேட்க கூடிய நிலை. வல்லமையாக நான் பயன்படுத்திய ஊழியக்காரர்கள் பல பேர் உண்டே. அவர்களையெல்லாம் எங்கே என்று நியாயதீர்ப்பு நாளில் தேவன் தன் சிம்மாசனத்தில் அமர்ந்து கேட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. அன்றைய கால பாலாசீர் லாரி முதல் சமீபத்திய கே.ஏ.பால் வரை அநேக அசரவைக்கும் பின்மாற்றங்கள்.

நம்மில் அநேகருக்கு கே.ஏ.பாலை தெரிந்திருக்க நியாயமில்லை. சகோதரன் தினகரன் அவர்களைப் பற்றி பேசும் போது ஒருநாள் ஒரு இந்து தெலுங்கு நண்பர் கே.ஏ.பாலை பற்றியும் பெரிதாக கூறினார். அப்போது அவரைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆந்திராவிலேயே ஏதோ ஒரு மிகப் பெரிய சபையின் போதகராக இருக்கலாம் என எண்ணம். சொந்தமாக போயிங் 747 விமானம் வைத்திருக்கும் ஒரே இந்திய பிரசங்கியார் என்கிற விபரம் கூட தெரியாதிருந்தது. ஆனால் சமீபத்திய செய்தி விவரங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆரம்ப காலங்களில் மிக வல்லமையாக பயன்படுத்த பட்ட இந்த சகோதரனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபம். இவரது Global Peace Initiative எனும் இணைய தளம் போனால், தான் பிரபலங்களுடன் (அன்னை தெரசா முதல் லிபிய கடாபி வரை) எடுத்துக்கொண்ட படங்களால் நிறைந்திருக்கிறது. எல்லாம் சுயதம்பட்டம். இவரது Gospel to the Unreached Millions என்ற பணியை நம்பி கோடிக்கணக்கான பணங்கள் நன்கொடைகளாக கொடுக்கப்பட்டன. ஆனால் இப்பணிக்கென ஒரு வெப்சைட் கூட இருப்பதாக தெரியவில்லை. சுவிசேசத்தை விட்டு விட்டு Global Peace Initiative எனும் நிறுவனத்தை பிரதானமாக Non-profit,non-religious என அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கில் பணம் சேகரமாக பின் இவர் அரசியலில் புகுந்ததால் அரசியல் விளையாட்டில் இந்நிறுவனத்தின் பணங்கள் ஆந்திர அரசால் முடக்கப்பட்டன. இவரைப் பின் தொடர்ந்து ஆறு வாரங்களை செலவிட்ட ஒரு நிரூபர் கூறும் போது “he only quotes one or two sentences from the Bible, and rarely mentions it” என்றார். இப்போது எல்லாவற்றிற்கும் மேலாக காயீனைப்போல தன் சொந்த சகோதரனையே ஆள் வைத்து கொன்ற கொலைப்பழியில் கையும் மெய்யுமாக போலீசில் சிக்கியிருப்பது மிகவும் வேதனையான விசயம்.சிம்சோனைப் போல இப்போதாவது மீண்டும் தேவனிடம் வந்து சரணடைந்தால் இவருக்கு நலமாயிருக்கும்.

பிரியமானவர்களே! பிரபலமான தேவ ஊழியர்களுக்கு வரும் சோதனைகளும் பயங்கரமானவைகள். இவைகளிலிருந்தெல்லாம் தேவன் அவர்களை தப்புவித்து கடைசி வரைக்கும் போராடி ஜெயிக்க பெலன் கொடுக்க தேவ பிள்ளைகள் நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
மேலும் விவரங்கள்.

தானியேல் 12:3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
வெளி 12:4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று;

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment