Tuesday, August 21, 2012

பிற மதத்தவருடன் வாக்குவாதம் செய்யலாமா? - குறும்பதில்கள்


விளக்கம் கொடுப்பது என்பது வேறு, வாக்குவாதம் செய்வது என்பது வேறு. எனவே இரு விதமான ஜனங்கள் இருக்கிறார்கள். சிலர் உண்மையாகவே ஆத்துமாவில் தாகம் கொண்டு சில பல கேள்விகளை கேட்டு விளக்கம் கேட்பார்கள். இவர்கள் கேள்விகளிலும் குரலிலும் அவர்கள் தாகமும் ஏக்கமும் தெரியும். இது போன்றவர்களுக்கு ஜெபத்துடன் பதில் அளிப்பதில் தவறேதும் இல்லை. அதை விட்டு விட்டு நேருக்கு நேர் வருகிறாயா? ஒரே மேடையில் விவாதிக்கலாமா என சவாலிடும் நபர்களிடமிருந்து விலகியிருப்பதே நல்லது. ஏனென்றால் வேதம் சொல்லுகிறது பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்.(மத்தேயு 7:6) இப்படி உங்களையும் பீறிப்போடும் அபாயம் இருப்பதால் நீங்கள் நீங்கி இருப்பதே உத்தமம்.

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர் (சங்கீதம் 51:17) இளகிய மனதும் நொறுங்குண்ட மனதும் உள்ளவர்கள் தேவனைத் தேடி கண்டு கொள்வார்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனது ஏற்கனவே கடினப்பட்டு இருப்பதால் எத்தனை தான் மழைபெய்தாலும் அவர்கள் இதயம் நீர்த்துபோவதில்லை. மேலும் வேதம் சொல்லுகிறது ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன் (I கொரிந்தியர்:11:16) என்று.

தெரியாதவன் கேள்வி கேட்டால் அவனுக்கு பதில் அளிக்கலாம். சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவன் கேள்வி கேட்டால் நாமும் முட்டளாக்கப்படுவோம். வாக்குவாதம் செய்பவனுக்கு பதில் கூறக்கூடாது. காரணம், ஒத்துக் கொள்ள மனதில்லாததால்தான் அவன் வாக்குவாதத்தில் இறங்குகிறான் நாம் அவனிடம் பேசி பிரயோஜனமில்லை.எனவே கிறிஸ்தவர்கள் வாக்குவாதம் செய்யக்கூடாது.

1 கொரி 1:18.சிலுவைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கிறது.

மேலும் விவரங்கள்

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment