Wednesday, August 08, 2012

எருசலேம் - The Ultra-Holy City

யூத குல ஆச்சாரங்களை மிகச் சிரத்தையாக கடைபிடிக்கின்றன அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் பெருகியிருக்கின்ற படியால் அது ஒரு "புதிய எருசலேமாக" அல்ட்ரா-ஹோலி சிட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது என டைம் பத்திரிகை (13Aug2012) அச்சம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கின்றது? சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா:8:6) எருசலேம் முழுவதும் ஆரம்பக் கல்விக் கூடங்களின் 65 சதவீத பிள்ளைகள் இந்த யூதர்களின் பிள்ளைகள் தானாம். இப்படி இஸ்ரேலில் சமீபகாலமாக இந்த அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிவருகின்றது. இவர்கள் தோராவை படிப்பவர்கள். ரபி எனப்படும் போதகமார்கள் சொல்லும் பிரமாணங்களை வரி பிசகாமல் பின் பற்றுபவர்கள். அவர்கள் அணியும் கருப்பு ஆடை, தோற்றம், முடி அமைப்பு எல்லாமே ஒரு சீருடை போலவே இருக்கும். எருசலேமை மொய்த்திருக்கும் இவர்களை பற்றி வேதம் தீர்க்கதரிசனமாக முன்பே கூறியிருக்கின்றது. இவர்களின் ஆதிக்கம் வேதாகமத்தை நிரூபிப்பதோடு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சமீபித்திருக்கிறது என கூறுகின்றது.

சகரியா 8:4-8
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும். இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

1 comment: