Monday, September 19, 2011

செப்டம்பர் 28-க்கு பின்

இந்த செப்டம்பர் மாதம் குறித்து பல்வேறு செய்திகளும் ஊகங்களும் கிறிஸ்தவ உலகில் உலாவருகின்றன. அவற்றை இங்கே நாம் தொகுத்து கொடுக்க முயற்சித்துள்ளோம்.

1.வரும் வெள்ளிக்கிழமை ஐக்கிய நாட்டு சபையில் (UN) இஸ்ரேல் தேசத்தையும் எருசலேம் நகரத்தையும் இரண்டாக பிரிப்பதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட முயற்சிக்கப்படுகின்றன. இஸ்ரேலிலிருந்து புதிதாக பாலஸ்தீன தேசத்தை உருவாக்க முயற்சி இது. புதிய தேசத்துக்கான கொடிகள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றன. என்ன நடக்கும்? இது சகரியா 12-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள விளைவுகளை உண்டாக்கும்.

2.எகிப்து தேசத்தில் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் இஸ்ரேலுக்கு எதிரான இன்னொரு பெரிய எதிரியை தெற்கில் உருவாக்கும்.(வடக்கில் ஏற்கனவே துருக்கி இந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்துள்ளது).

3.பூமிக்கும் சூரியனுக்கும் இடையே “Comet Elenin" எனும் கோள் வருவதாகவும் இதனால் மூன்று நாட்கள் வரைக்கும் பூமியின் சில இடங்களில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் என்றும் செய்திகள் பரவியுள்ளன. இது செப்டம்பர் 28 வாக்கில் சம்பவிக்குமாம். காமெட் எலனின் வருவது உண்மைதானெனினும் மூன்று நாட்கள் காரிருள் என்பது இதுவரை உறுதிபடாத செய்தியாகும்.

4.இதில் இன்னொரு சுவாரசியம் செப்டம்பர் 28-ல் யூதர்களின் புதிய ஆண்டு தொடங்கவிருக்கிறது.இதனை ரோஷ் ஹஷன்னா (Rosh Hashanah) என்பார்கள். அதாவது வேதத்தில் இது யூதர்களின் ஐந்தாவது பண்டிகையான “எக்காளப் பண்டிகை” என குறிப்பிடப்படுகிறது. இந்த எக்காளம் ஊதும் சமயம் யாராலுமே முன்னறிவிக்க முடியாதாம். பூரண சந்திரனின் தோற்றத்துக்கு ஏற்ப அது மாறுபடுமாம்.(மேலே மூன்று நாள் காரிருள் நினைவில் கொள்க). அது போலவே முன்னறிவிக்க முடியாத கிறிஸ்துவின் இரகசிய வருகையும் இருக்கும் என்பது சிலரின் யூகம்.

5.ஏஞ்சல் டிவி புகழ் சகோ சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தனக்கு ஆண்டவர் வெளிப்படுத்திய செய்தியாக செப்டம்பர் 28-ல் Church is going to enter into a new season - era என்கிறார். இது குறித்ததான அவரது செய்தியை ஆங்கிலத்தில் கீழே நீங்கள் mp3 டவுண்லோடு செய்துகொள்ள்லாம். செப்டம்பர் 28-ல் சபைகளுக்கான ஒரு புது/இறுதி யுகம் ஆரம்பிப்பதாகவும் இந்த புது யுகத்தில் இப்போது போல் விசேசித்த ஊழியர்கள் மட்டுமல்லாமல் எல்லோரும் தீர்க்கதரிசனங்கள் சொல்வார்கள் எல்லோரும் தரிசனங்களையும் சொப்பனங்களையும் காண்பார்கள். இயேசுவின் சீசர்கள் காலத்தில் நடந்தது போல மனிதர்கள் பிரத்தட்சியமாக தேவதூதர்களை காண்பார்கள். அது மிக சாதாரண விசயமாக கருதப்படும். அற்புதங்கள், அதிசயங்கள் பயங்கரமாக நடக்கும். மரித்தோர்கள் உயிர்த்தெழுவார்கள். சபை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு லெலலுக்கு போய்விடும் என்கிறார்.
காத்திருப்போம்.

Download here

[mp3] A New Season_(Part 1)_Sadhu Sundar Selvaraj.mp3 0 days old


[mp3] A New Season_(Part 2)_Sadhu Sundar Selvaraj.mp3 0 days old

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment