Friday, September 28, 2007

தேவாலய திரைச்சீலை ரகசியம்

மோசே காலத்து ஆசரிப்பு கூடாரத்தில் தொங்க விடப்பட்ட திரைசீலையானது பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்க தொங்கவிடப்பட்டது.(யாத்திராகமம் 26:33 ) அந்த திரைசீலையை கடந்து பிரதான ஆசாரியன் மட்டுமே செல்ல முடியும்.பிரதான ஆசாரியர்கள் முன்பு தங்கள் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடுவர்.(எபிரெயர் 7:27)
அதற்கெல்லாம் தேவையில்லாமல் ஒரே முறை நமது பிரதான ஆசாரியனாகிய யேசுகிறிஸ்து பலியாகி அந்த திரைச்சீலையை இரண்டாக கிழித்து சென்று விட்டார். உலக வரலாறும் கிபி,கிமு வென இரண்டாக கிழிந்து விட்டது.(எபிரெயர் 6:20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.)

அதில் ஆசர்யம் என்னவென்றால் தேவாலயத்தின் திரைச்சீலை கீழ்தொடங்கிக் மேல்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது என்றிருந்தால் மனிதன் கிழித்திருப்பானோ என சந்தேகிக்திருக்கலாம்.அதற்க்கு மாறாக மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்து அது தேவனின் செயலேயென நிரூபித்தது.

(மத்தேயு 27:51,மாற்கு 15:38,லூக்கா 23:45) அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

எபிரெயர் 8:2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷராலல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ்செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு.

எபிரெயர் 9:11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு,

எபிரெயர் 9:25 பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

எபிரெயர் 7:27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment