Friday, September 21, 2007

தேவன் தள்ளுகிறார் - மார்ட்டின் லூதர்

பழமைகளிலும், தவறுகளில் மூழ்கி கிடந்த கிறிஸ்தவ சபைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் மார்ட்டின் லூதர் அவர்கள்.Martin Luther (1483 – 1546).ரோமன் கத்தோலிக்கம்,புராட்டஸ்டன்ட் எனப்படும் பிரிவுகள் இவர் காலத்திலிருந்தே உருவானது.ஆனால் இப்படி ஒரு பிரிவையோ பிளவையோ ஏற்படுத்த அவர்கு அவா துளியும் இருக்கவில்லை.ஆனாலும் அவருக்கு வேறு வழியும் தெரியவில்லை.இப்படியாய் கூறுகிறார் அவர்.

"தேவன் என்னை வழி நடத்தவில்லை;அவர் என்னைப் பிடித்து முன்னால் தள்ளுகிறார்.அவர் என்னைக்கொண்டு செல்கிறார்.நான் எனது எஜமானனல்ல. நான் அமைதியாக வாழவே விரும்புகிறேன்.ஆனால் புரட்சிகளின் நடுவிலும்,எதிர்ப்புகளின் நடுவிலும் தள்ளப்படுகிறேன்"
-லுத்தர் D'Aubigne b5 ch2

"பூமியின் அரசர்களும் முழு உலகமுமே அஞ்சி நடுங்குகிற போப்பானவரை எதிர்க்க நான் யார்?....
இந்த முதல் இரு ஆண்டுகளில் என் இதயம் எவ்வாறு துன்பமடைந்தது என்பதை ஒருவராலும் அறியமுடியாது.எப்படிப்பட்ட கைவிடப்பட்ட நிலையில் இருந்தேன் என்று சொல்வேன்? எப்படிப்பட்ட அவலத்தில் மூழ்கினேன் என்பதே...."
-லுத்தர் ibid b3 ch6


லூக்கா 21:12. இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13. ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14. ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15. உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

Luke 21:12. But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.
13.And it shall turn to you for a testimony.
14.Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:
15.For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment