Wednesday, September 16, 2015

CERN ஐரோப்பாவிலுள்ள மிகப்பெரிய அணு ஆராய்ச்சி நிலையம். உலகின் மிகப்பெரிய மற்றும் மிக சக்தி வாய்ந்த துகள் முடுக்கி எனப்படும் Collider இங்கு தான் உள்ளது. இது நிலத்திற்கு அடியில், தரைக்கு கீழே, 50 முதல், 175 மீட்டர் ஆழத்தில், 17 மைல் நீளத்தில் (27 கிலோ மீட்டர்) மிகப்பெரிய வட்ட சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ளது. இது சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லைகளின் கீழே உள்ளது. 100 நாடுகளில் இருந்து, 10 ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள், இணைந்து இந்த திட்டத்தில் பணியாற்றுகின்றனர் எனினும் ஐரோப்பிய மூளையே இந்த திட்டத்தின் முக்கிய மூல காரணம் ஆகும். இதை கட்டியெழுப்ப 64 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாயிற்றாம். இது இப்போது உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான சோதனை ஆராய்ச்சி மையம் ஆகும். இந்த மையம் தான் கடவுள் துகளை கண்டு பிடித்ததாக 2012-ல் அறிவித்தது. அணுத்துகள்களை மோதவிட்டு செய்யப்படும் இந்த ஆய்வு மிக ஆபத்தானது எனினும் பேரண்டம் உருவாகியது குறித்ததான‌ மற்றும் அடிப்படை துகளின் பண்புகள் ஒழுக்கம் முதலியனதான தகவல்களை அறிய விஞ்ஞானிகள் துடிக்கி‍ன்றார்கள்.‘கடவுள் துகள்’ பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்று பிரபல பௌதீக விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார். எனினும் கடவுள் துகள் (God particle), இருள் பொருள் (Dark matter),Ghost particle என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அநேக surprise findings கிடைக்கின்றனவாம். வெளிப்படுத்துதல் 9 ம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது போல பாதாளக்குழியை இவர்கள் திறந்து விடப் போகின்றார்களா? வேதம் சொல்லுகிறது "அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையில் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது" என. அதை தொடர்ந்து அந்த புகையினால் வந்த வாதைகளையும் படிக்கிறோம். இந்த கொலைடர் இருக்கும் இடம் செயின்ட் ஜெனிஸ் போலி (Saint-Genis-Pouilly) எனும் இடமாகும். படத்திலுள்ள் மேப்பில் நீங்கள் பார்க்கலாம். அதாவது போலி (அப்போலியோன்) எனும் கடவுளுக்கு கோயில் இருந்த இடம். வேதமும் 11ம் வசனத்தில் சொல்லுகிறது "அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர்" என்று. அதுமட்டுமல்லாமல் இந்துத்துவத்தில் அழிக்கும் கடவுளாக கருதப்படும் சிவனுக்கும் இங்கே சிலைவைத்துள்ளார்கள். CERN-னின் நீல நிற லோகோவை கூர்ந்து கவனியுங்கள் 666 தெரியும். You think these all coincidence?


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment