Monday, September 21, 2015

ஒவ்வொரு செப்டம்பர் 21 ஆம் தினமும் உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒலிவ (Olive) இலையானது அமைதி மற்றும் சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார். இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது. "அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக் கொண்டு வந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான் (ஆதி:8:11). ஒரு பெரிய பிரளயத்தின் பின்பு பூமியில் அமைதி திரும்பியதை ஆலிவ் இலையுடன் கூடிய புறா சுட்டி காட்டியதால் இன்றும் அது உலக அமைதியின் சின்னமாக கருதப்படுகிறது.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment