Thursday, March 09, 2006

வழக்குக்கு விலகு

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்கள்.எந்த அளவுக்கு நீதிமன்றங்களுக்கும் வழக்குகளுக்கும் தள்ளி இருக்கிறோமோ அந்த அளவுக்கு அது நமக்கு நல்லது.உடன்பிறந்தோர் அநேகர் சொத்துக்காக சண்டையிட்டு கடைசியில் அது யாருக்கும் இல்லாமல் வக்கீல் அந்த சொத்துக்களை சுட்டுக் கொண்டு போவதை இந்தகாலங்களில் பார்ப்பது சகஜம்.அது குறித்ததான ஒரு பைபிள் வாக்கியம் இதோ.

நீதிமொழிகள்:20:3.
வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.

Interesting Bible Words
Proverbs 20:3 It makes you look good when you avoid a fight
only fools love to quarrel.

1 comment:

  1. அன்புள்ள தோமா அவர்களுக்கு,

    கடந்த முறை நான் பின்னூட்டமிட்ட பிறகு நீங்கள் மூன்று பதிவுகள் போட்டு விட்டீர்கள். ஆனாலும் என் பின்னூட்டம் உங்கள் பதிவில் வராததால் தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன். காரணம் வேறொன்றுமில்லை. இதற்கு முன் இதுபோல் ஒரு சில அன்பர்கள் நல்ல முறையில் விவாதிக்கலாம் எனக் கூறி சம்மதித்து விட்டு பின்னர் நொண்டி காரணங்கள் கூறி ஒதுங்கியதாலும், வேறு சிலர் என்னுடைய பின்னூட்டத்தையே அனுமதிக்காததாலும் நீங்களும் அது போல் தானோ என தவறாக நினைத்து விட்டேன். மன்னிக்கவும். நான் உங்களின் அலுவல்களில் குறுக்கிடுவதாக நினைக்க வேண்டாம். என் சந்தேகங்கள் நியாயமானவையாக இருந்தால் அனுமதியுங்கள். பின்னர் உங்களுக்கு நேரம் கிடைப்பது போல் உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். அது போதும்.

    என் சந்தேகங்களுக்கு தனி பதிவாகவே பதிலிடுவதற்கு மிக்க நன்றி. மோசே முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" யைக் குறித்த உங்கள் கருத்தினை படித்தேன். சாதாரனமாக மற்றவர்கள் கூறும் அதே பதிலைத் தான் கூறுகிறீர்கள். நான் கிறிஸ்தவ அன்பர்கள் யாரிடம் இது குறித்து கேட்டாலும் அவர்கள் கூறும் பதில் இது தான். உங்கள் நம்பிக்கையை நான் எதிர்க்கவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை. இது குறித்த என்னுடைய கருத்தினை மட்டும் வைக்கிறேன். தவறெனில் சற்று விளக்குங்கள்.

    பழைய ஏற்பாட்டில் மோசே மட்டுமல்லாமல் பல தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க சாத்தியமில்லை. காரணம்,

    1. "அந்த தீர்க்கதரிசியைக்" குறித்து இயேசுவும் முன்னறிவித்திருக்கிறார். "நான் போய் அவரை அனுப்பி வைப்பேன். நான் போகவில்லையெனில் அவர் வர மாட்டார்" என புதிய ஏற்பாடு - யோவான் 16:7 -ல் இயேசு கூறியதாக வருகிறது. தன்னைப் பற்றி தானே இயேசு முன்னறிவித்தார் என்று நம்ப முடியுமா?

    2. இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் வந்தவர். நான் எடுத்துக்காட்டிய உபாகமம் கடைசி வசனத்தில், "மோசே போன்ற தீர்க்கதரிசி இஸ்ரவேல் சமுதாயத்தில் பின்னர் எழும்பினதில்லை" என வருகிறது. இயேசு தான் அந்த தீர்க்கதரிசி எனில் இந்த வசனம் பொய்யாகிறது. பைபிளின் இவ்வசனம் உண்மையெனில் நிச்சயமாக "அந்த தீர்க்கதரிசி" இயேசுவாக இருக்க முடியாது. இந்த இரண்டில் எதை நீங்கள் சரி காண்கிறீர்கள். அல்லது இரண்டையும் சரி காண இயேசு இஸ்ரவேல் சமுதாயத்தில் பிறக்கவில்லை எனக் கூற வேன்டும். நீங்கள் அவ்வாறு நினைக்கிறீர்களா?

    3. "மோசேயைப் போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பைபிள் கூறும் அடையாளங்கள்:

    இ) பார்வோனுக்கு செய்வித்த அடையாளங்கள், அற்புதங்கள், இஸ்ரவேலர்களுக்கு பிரதியட்சம் செய்த சகல வல்லமையான கிரியைகள், மகாவல்லமையான செய்கைகள் - உபாகமம் (34:10,11)
    ஈ) கர்த்தரை முகமுகமாய் அறிந்தவர். உபாகமம் (34:12)

    இங்கு "மோசேயை போன்ற தீர்க்கதரிசி" என்பதற்கு பார்வோனுக்கு எதிராக செய்த கிரியைகளும், கர்த்தரை முகமுகமாய் அறிந்ததும் அடையாளங்களாக பைபிள் கூறுகிறது. இந்த இரண்டுமே இயேசுவுக்கு பொருந்தாத போது பைபிள் முன்னறிவிக்கும் தீர்க்கதரிசி எப்படி இயேசுவாக முடியும்.

    4. இனி நீங்கள் ஆதாரமாக கூறும் புதிய ஏற்பாட்டின் வசனங்கள் கூட மோசே முதல் பல தீர்க்கதரிசிகள் முன்னறிவித்த அந்த தீர்க்கதரிசி இயேசு தான் என்பதற்கு ஆதாரமானவையாக இல்லை. மறித்து நீங்கள் காட்டியிருக்கும் வசனங்கள் இயேசுவின் பாடுகளும் அப்பாடுகளிலிருந்து அவரை கர்த்தர் (அவர் கொல்லப்படுவதிலிருந்து) காத்தருளியதற்கும் உள்ள ஆதாரங்களாகும். இதனைக்(இயேசுவின் சிலுவை மரணம்) குறித்து உங்களுக்கு விருப்பம் எனில் பின்னர் சர்ச்சை செய்வோம். அப்பொழுது இவ்வசனங்கள் எவ்வாறு அதற்கு ஆதாரமானவை என்று கூறுகிறேன்.

    உங்கள் அறிவுப் பூர்வமான கருத்துக்கு ஆவலுடன் காத்திருக்கும்,

    பகுத்தறிவாளன்.

    ReplyDelete