Friday, July 10, 2015

நாம் நன்றாக‌ கூர்ந்து கவனித்தால் உலகத்தில் இன்றைக்கும் நாம் பின்பற்றக்கூடிய பல காரியங்கள் பைபிளில் இருந்து வந்ததை நாம் அறியலாம். நீங்கள் படத்தில் காணும் கம்பம் ஒன்றில் ஏற்றப்பட்டிருக்கும் பாம்பு சித்திரம் உலகமெங்கும் மருத்துவ உலகில் பிரபலம். பெரும்பாலும் மருத்துவத்துறையினர் இதனையே லோகோவாக பயன்படுத்துவார்கள். இச்சித்திரம் கூட ஒரு வேதாகம சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பழக்கத்தில் வந்ததே. இஸ்ரேல் ஜனங்கள் வனாந்திரத்தில் பிரயாணம் பண்ணும் போது மோசேயிடம் இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை எங்களை எகிப்து தேசத்திலிருந்து எங்களை வரப்பண்ணினதென்ன? என முறு முறுக்க தொடங்கினார்கள். இதனால் கர்த்தர் கொள்ளிவாய்ச்சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைத்தான். அன்றைக்கு சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல இயேசு கிறிஸ்துவும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, சிலுவையில் உயர்த்தப்பட்டார். அவரை நோக்கி பார்த்தவர் யாவரும் பிழைப்பார்கள். எண்:21:5-9, யோவா:3:14,15


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment