Wednesday, April 20, 2011

வேதத்தை உறுதிப்படுத்தும் நெடுஞ்சாலைக்குறியீடுகள்

கடந்த சிலவருடங்களில் மட்டும் மெட்ராஸ் சென்னையாகிவிட்டது, பம்பாய் மும்பையாகிவிட்டது, கல்கத்தா கொல்கொத்தாவாகிவிட்டது. இப்படி நம் நாட்டு பல பட்டிணங்களின் பெயர்களும், ஊர்களின் பெயர்களும் இஷ்டத்துக்கும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்க, பரிசுத்த வேதாகமம் உண்மை அதில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களெல்லாம் உண்மை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லும் சான்றாக புனித வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஊர்களும் பட்டணங்களும் எல்லாம் இன்றைக்கும் பெயர்மாறாமல் அப்படியே இஸ்ரவேல் தேசத்தில் இருக்கின்றன.பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகியும் எருசலேம்,நாசரேத்,பெத்லகேம்,கப்பர்நகூம்,எரிகோ இப்படி பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் ஊர்களெல்லாம் அப்படியே இஸ்ரேல் தேசத்தில் இன்றைக்கும் இருப்பது நமக்கு எடுத்துரைப்பது என்ன? விவிலிய புத்தகம் ஒரு இதிகாசமோ, காப்பியமோ அல்லது ஒரு கட்டுக்கதையோ அல்ல. அது ஒரு வரலாற்றுப் புத்தகம். அதில் குறிப்பிடப்பட்டனவையெல்லாம் வரலாற்று நிஜங்கள் என்கின்றன. அதற்கு சான்றாகத் தான் இந்த ஊர்களும் அதன் பெயர்களும் இன்றைக்கும் அதே நிலையில் நிலைத்து நிற்கின்றன.மூடனோ அதை உணரான்.(சங்கீதம்:92:6)

மத்தேயு 21:10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.

மத்தேயு 21:11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.

யோவான் 7:42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள்.

லூக்கா 4:31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

மத்தேயு 20:29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப் போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்றார்கள்.






0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment