Wednesday, June 15, 2016

உலகில் முதன்முறையாக‌ தந்தி அனுப்பப்பட்டபோது அது சுமந்து சென்ற வாசகம் ஒரு வேதவசனமாகும். ஒற்றைக்கம்பி தந்தி முறை மற்றும் மோர்ஸ் தந்திக் குறிப்பு ஆகியவற்றைக் கண்டுபிடித்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சாமுவேல் மோர்ஸ் 1844ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி அன்று உலகின் முதல் தந்திச் செய்தியை அமெரிக்க தலைநகரம் வாஷிங்டனில் இருந்து பால்டிமோர் நகருக்கு வெற்றிகரமாக அனுப்பி ஒற்றைக்கம்பி தந்தி முறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவர் அனுப்பிய அந்த முதல் தந்தி வாசகம் புனித வேதாகமத்தின் எண்ணாகமம்:23:23 வசனத்தை கொண்டிருந்தது. அது நினைவாக மேரிலாண்ட் நெடுஞ்சாலையொன்றில் நிறுவப்பட்டுள்ள பலகையை நீங்கள் படத்தில் காணலாம். What was the first telegraph message? Sent by inventor Samuel F.B. Morse on May 24, 1844, over an experimental line from Washington, D.C., to Baltimore, the message said: "What hath God wrought?" Taken from the Bible, Numbers 23:23.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment