Tuesday, June 14, 2011

ஜாமக்காரன் ஜீன் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை

”ஒருவேளை உங்களுக்கு இஷ்டமில்லாத கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது நம் கடமை. காரணம், அதிகாரங்கள் எல்லாம் தேவனால் அனுமதிக்கப்படுவது ஆகும். கர்த்தருக்கு தெரியாமல் எந்த ஆட்சியும் வருவதில்லை.”

”நம் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் - கட்டுப்பாடு விட்டுப்போனால் பிறகு அவர்களை சரிப்படுத்துவது மிகக்கடினம். ஆண்களுக்கு சமமாக இப்போது பெண் பிள்ளைகளும் பெற்றோருக்கு கீழ்ப்படிவதில்லை. சுதந்திரத்துக்கும் - பாசத்துக்;கும் எல்லை அவசியம். ஆரம்ப நிலையிலேயே பிள்ளைகளிடம் கண்டிப்புடன் நடந்துக்கொள்ளுங்கள்.”

வேதவசனம் கூறுகிறது.
பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான். நீதி 13:24.
பிள்ளையானவன் நடத்த வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6

குற்றம் சாட்டப்பட்ட CSI பிஷப்மார்களுக்கும் - ஆயர்களுக்கும் சட்டத்தில் தண்டனை உண்டு
CSI பிஷப்- ஆயர்கள் எந்தெந்த காரணங்களுக்காக தண்டிக்கப்படமுடியும். CSI சட்டம் (CONSTITUITION) கூறுவது என்ன?
தண்டிக்கப்பட வேண்டிய குற்றங்களின் பட்டியல்

CSI சபைகள் கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதா? சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டதா? டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டதா?

மாடரேட்டர் & பிஷப் சொத்து விவரம் சமர்ப்பிக்கவேண்டும்
திருட்டுத் தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும். நீதி 9:17.
அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். நீதி 16:8

பெந்தேகோஸ்தே சபைகளின் பின்மாற்றம்


"இந்த நோட்டீஸ்சில் கிறிஸ்தவர்களின் கூட்டம் என்பதற்கு அடையாளமாக ஏதாவது காணப்படுகிறதா? என்பதை உற்று கவனித்துசொல்லுங்கள்! குறைந்த பட்சம் ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைகள் என்பதற்காகவாவது வேத புத்தகத்திலிருந்து ஒரே ஒரு வசனமாவது அல்லது இயேசுகிறிஸ்து என்ற பெயராவது எங்காவது காணப்படுகிறதா? இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம்காட்ட நோட்டீஸ்ஸின் எந்த ஒரத்திலாவது சிலுவை போன்ற எந்த ஒரு அடையாளமாவது காணப்படுகிறதா? என்று பூதக்கண்ணாடியிலாவது பார்த்து சொல்லுங்களேன். என்ன ஒரு வெட்கம் கெட்ட அறிவிப்பு இது!"

"கடையில் ஊறுகாய் தயாரித்து விற்பவர், மசாலாபொடி, இட்லிபொடி இப்படி விற்கும் பேக்கட்டுகளில், பாட்டில்களில் வசனத்தை எழுதிவிற்கும் சில கிறிஸ்தவ வியாபாரிகளின் பொருள்களை இவர்கள் யாரும் பார்த்ததில்லையா? அதை வாங்கும் நபர் ஒரு வசனமாவது வாசிக்கமாட்டாரா? அந்த பாட்டில் டேபிளில் வைக்கப்படும்போது ஒரு புறமதஸ்தராவது அந்த வசனத்தை தினம்தினம் வாசிப்பாரே! என்ற வாஞ்சையிலும், எதிர்பார்ப்பிலும் வசனத்தை அச்சடித்து ஒட்டி விற்கும் அந்த கிறிஸ்தவ வியாபாரிக்குள் ஏற்பட்ட அந்த ஆவிக்குரிய வாஞ்சைகூட, இத்தனை பெரிய பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்கள் ஒருவருக்காவது தோன்றவில்லையே!"

மனுஷருக்கு பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியம் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். எபே 6:6.

அசம்பளீஸ் ஆஃப் காட் (AOG) சபைகளிலும் ஊழல்
"அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபை உலகளவில் சட்டத்திட்டங்களுடன் கூடிய நல்ல அமைப்பு (Structure) கொண்ட சபையாகும்."
"TPM சபைகளுக்கு அடுத்ததாக நான் மதிக்கும் பெந்தேகோஸ்தே சபையான அசம்பளீஸ் ஆப் காட் (AOG) சபைகளில் சில வருடங்களாக புகைந்துக் கொண்டிருந்த பண ஊழல்கள் இப்போது உலகம் அறிய தொடங்கிவிட்டன."
"அரசாங்க அங்கீகாரத்தை AOG சபை இழந்து நிற்கிறது."

கேரளா A.G சபை பாஸ்டரின் நவீன உபதேச வாழ்த்து அட்டை
"மஹாவீராவை தெய்வமாக வணங்குகிறவர்களுக்கு வருடாவருடம் இந்த AG சபை பாஸ்டர் அனுப்பும் வாழ்த்து அட்டை ஆகும். இதில் எழுதப்பட்ட வார்த்தை கடவுளாகிய மகாவீர் உங்கள் யாவரையும் இவ்வருட முழுவதும் ஆசீர்வதித்து காப்பராக."


ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது PRAISE THE LORD, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று கூறலாமா?
"அதற்கு பதில் அவரவர் கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்த அல்லது மரியாதை செலுத்த என்ன வார்த்தைகளை உபயோகிப்பீர்களோ அதை அர்த்தத்துடன் உபயோகியுங்கள். பிரைஸ் தி லார்ட் என்றுதான் நாங்கள் கூறுவோம் என்றால் தாராளமாக கூறுங்கள், கர்த்தரை துதிப்பது பாவமல்ல. ஆனால் அந்த குறிப்பிட்ட சூழ்நிலைக்கு அது பொருத்தமான வார்த்தை அல்ல என்று கூறுகிறேன்."

விவாகரத்து DIVORCE
"குடும்பத்தில் உண்டாகும் பிரிவினையின் பாதிப்பு சபையையும், நாட்டிலும் பிரதிபலிக்கும். இது நாட்டுக்கும் ஆபத்து. முழு உலகத்துக்கும் பாதிப்பை உண்டாக்கும்."

"விட்டுக்கொடுப்பவர்கள் ஒருநாளும் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக்கொடுப்பதில்லை."

"குடும்பத்தில் தோற்பவர்கள்தான் வெற்றி பெறுகிறார்கள்! என்று நம் தமிழ் இலக்கியம் கூறுகிறது!"

"போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 1 தீமோ 6:6 என்று வேதவசனம் கூறுகிறது. எனவே அதிக எதிர்பார்ப்பு சில சமயம் ஆபத்தை கொண்டுவரும்."

மேலும் படிக்க http://jamakaran.com

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment