Tuesday, March 20, 2012

கடவுள் காமெடி

சாதி மத இன பேதமின்றி உலகெங்கிலுமிருந்து அனைத்து தரப்பிலும் கடவுளை வம்புக்கிழுத்து காமெடியாய் பேசுகிறவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அதில் சமீபத்தில் ஜிம்பாவே அதிபர் ராபட் மொகாபேயும் அடக்கம். பல்வேறு சுகவீனங்கள் மத்தியிலும் தப்பி பிழைத்து தனது 88-ஆவது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்த முகாபே, “பல முறை நான் செத்திருக்கிறேன். அதனால் நான் கிறிஸ்துவையும் மிஞ்சிவிட்டேன்” என்று ஜோக்கடித்திருக்கின்றார். நல்ல காமெடி சார்.

“கடவுள் மனிதனாக பிறந்து திருவள்ளுவர் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்” என்று ஒரு மிமிக்ரி பாடகர் காமெடியாக பாடியது நினைவுக்கு வருகின்றது. இது தான் அவர் தன் மனிதப்பிறவியில் கண்ட மாபெரும் பாடு போல. மேற்கண்ட இருவரின் புரிதலும் நல்ல ரசனை. நல்ல காமெடி.

அதையும் மிஞ்சியது இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் அவர்களின் சமீபத்திய கண்டுபிடிப்பு “அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள்” என்பதாம்.
எல்லா காமெடியிலும் கடைசி காமெடி தான் சூப்பரோ சூப்பர்.

I கொரிந்தியர் 14:20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள்.

Ref: Time March 5,2012 ”I have died many times.That`s where I have beaten Christ"- Zimbabwe President Robert Mugabe.

http://tamil.oneindia.in/news/2012/03/20/tamilnadu-rama-gopal-sees-christian-churches-behind-koodankulam-aid0090.html

1 comment:

  1. இந்த நாட்டின் பொருளாதாரமோ அதாள பாதாளத்தில் இருக்கிறது. நாம் நிற்பதும; நிர்மூலமாகாதிருப்பதும் தேவனுடைய கிருபையே என இந்த மூடன் அறியாதிருக்கிறான் போலும். தேவனை விட தன்னை உயர்திக் காண்பிப்பதன் மூலம் என்னத்தை சாதிக்க நினைக்கிறானோ தெரியாது

    ReplyDelete