Monday, November 14, 2011

"இந்தச் சந்ததி" யார்? - குறும்பதில்கள்

Dear Brother in Christ,
Praise the lord, I am KS. Bro i have one doubt in bible plz send ans for me மத்தேயு 24 : 34 "இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."இங்கு கூறப்பட்டுள்ள "இந்தச் சந்ததி" யார்?


கிறிஸ்துவில் பிரியமான சகோதரர் அவர்களுக்கு,
எனக்கு தெரிந்த வகையிலும் புரிந்த வகையிலுமான பதிலை இங்கே உங்களுக்கு தந்துள்ளேன். மாற்று கருத்துக்கள் இருப்பின் அவைகள் வரவேற்க்கப்படுகின்றன. வேதத்தின் ஆழங்களை அறிவது அத்தனை சுலபமல்லவே.

சிலர் “இந்த சந்ததியை” இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இருந்த சந்ததி என்று குறிப்பிடுவர். அக்கருத்துபடி பார்த்தால் எருசலேம் தேவாலய அழிவை அவர் இருந்த கால ஜனங்கள் பார்த்தார்களே ஒழிய மேலும் அவர் அந்த 24-ம் அதிகாரத்தில் கூறிய இரண்டாம் வருகை சம்பவங்களை அவர் இருந்த கால ஜனங்கள் பார்க்கவில்லை. எனவே இக்கருத்தை நாம் தவறான கருத்தாக கொள்ளலாம்.

வேறு சிலரோ அதே அதிகாரத்தில் குறிப்பிடப்படும் அத்திமரம் துளிவிடும் காலத்தில் அதாவது இஸ்ரேல் தேசம் மீண்டும் உருவாகும் காலத்தில் வாழும் சந்ததியினரே இயேசுவானவர் குறிப்பிடுகிறார் என்கிறார்கள். அதாவது 1948-ம் ஆண்டு முதல் 70 ஆண்டுகள் (1 சந்ததி) அதாவது 2018 வரையான காலத்தில் வாழும் மக்கள் தான் அந்த "இந்தச் சந்ததி"யாம். எனக்கு ஏனோ இந்த கணக்கீட்டிலும் உடன்பாடு இல்லை. ஆனால் அதனை நம்புவோர் தொடந்து அதனையே நம்பிக்கொண்டிருக்க வேண்டுகிறேன்.

எனது கணிப்பு அவர் "இந்தச் சந்ததி” என குறிப்பிட்டது யூத சந்ததியை அதாவது யூத வம்சத்தை. ஒரு தேசத்தை அல்லது ஒரு குல ஜனங்களை கூட குறிப்பிட இந்த ஜெனரேசன் அல்லது சந்ததி என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை நாம் மத்தேயு:12:39 மற்றும் மத்தேயு:23:36 போன்ற வசனங்களில் காணலாம். கிறிஸ்துவின் காலத்துக்குப் பின் எருசலேமில் ரோமர்களின் படையெடுப்பு அதையடுத்து யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப்படல், சிறைப்பிடிக்கப்படல் நடந்தது. இவ்வாறு சொந்த வீட்டை இழந்து நாட்டை இழந்து உலகமெங்கும் சிதறியபோதும் "இந்தச் சந்ததி” ஒழிந்துபோகாதென்று, அதாவது யூத இனம் ஒழிந்து போகாது வேதத்தில் கூறப்பட்டுள்ள இயேசுவின் இரண்டாம் வருகை சம்பவங்கள் அனைத்தையும் பார்க்க அந்த ஜனம் கண்டிப்பாக இருக்கும் என்ற அர்த்தத்தில் கூறப்பட்டதாகவே நான் நினைக்கிறேன்.எப்படி உங்கள் கருத்து?

1 comment:

  1. எளிமையான மற்றும் சரியான விளக்கம்...
    நன்றி சகோதரரே
    மத்தேயு 11:16
    மத்தேயு 12:41
    மத்தேயு 12:42
    மத்தேயு 23:36ல்களில் கூறப்பட்ட "இந்தச் சந்ததி" யூத சந்ததி, எருசலேமைத் தான் குறிக்கிறது.

    ReplyDelete