Monday, November 07, 2011

கள்ளரைப் போல நடத்தப்பட்ட தேவமனிதர்கள்

இந்தியாவில் சுகபோகமாக ஹாயாக சுற்றிவந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையின் செய்தி. எங்கோ இறுகிக்கொண்டிருக்கும் கயிறு நாளை நம் கழுத்தையும் நெறிக்கலாம். உஷாராக இறைவனிடம் பிரார்திக்க இப்போதே தொடங்கிவிடுவது நல்லது. அமெரிக்காவைச் சேர்ந்த தேவ ஊழியர் வில்லியம் லீ (William Lee) கேரளாவில் ஒரு இசைப்பெருவிழாவில் (Musical Splash 2011) கலந்து கொண்டதற்காக ஒரு திருடனைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் பல குற்றவாளிகளோடு மூன்று நாட்கள் அடைக்கப்பட்டிருக்கிறார். சுற்றுலா விசாவில் வந்த அவர் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டாராம் இதுதான் இந்திய அரசு கொடுத்த விளக்கம். இனிமேல் வில்லியம் லீ இந்திய மண்ணில் கால்வைக்கக் கூடாது என தடையும் இட்டிருக்கிறார்கள். நாம் மிகவும் விரும்பி கேட்கும் பாடகர் ரான் கெனோலியும்(Ron Kenoly) இந்த கொச்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அவருக்கும் இந்திய அரசு ஆயுட்கால தடைவிதித்துள்ளது.
வெறுமனே கிறிஸ்தவ பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்து கேவலப்படுத்திய இந்திய அரசாங்கம், ஆசிரமங்களுக்கும் யோகிகளிடமும் செல்லும் வெளிநாட்டவர்களை மட்டும் விட்டு வைப்பது எந்த வகையில் நியாயமோ. உனக்கொரு சட்டம். எனக்கொரு சட்டம். எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இது போன்ற நெகடிவ் செய்திகள் பலரையும் சென்றடைந்து பரவிவிடாமல் இருக்க கவனமாக பார்த்துக்கொள்வோம்.
இதனால் யாரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக ஜெபிக்கவும் மாட்டார்கள். நாமும் வீழ்ந்துகொண்டேயிருப்போம் நாமறியாமலே.
William Lee Ministries
Ron Kenoly Ministries

மாற்கு 14:48 கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

மாற்கு 13:9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.

http://www.ucanews.com/2011/10/19/judge-confirms-evangelist-deportation/
http://www.news-journalonline.com/news/local/east-volusia/2011/10/22/evangelist-home-in-ormond-beach-after-being-jailed-in-india-for-preaching-without-proper-visa.html

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment