Wednesday, August 17, 2011

சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்

2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்திருக்கும் டெக்சஸ் மாகாண கவர்னர் ரிக் பெர்ரி சமீபத்தில் கர்த்தரின் கிருபையால் ஒரு வெற்றிகரமான நாடு தழுவிய உபவாச நாளை நடத்தி முடித்திருக்கிறார்.அதற்கு எதிராக உருவாக்கபட்ட federal lawsuit போன்ற ஆயுதங்கள் வாய்க்காமல் போனது.கர்த்தருக்கே மகிமை.

30,000 -க்கும் அதிகமான பல்வேறு நிற இன மொழி கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் ஒரே ஸ்டேடியத்தில் ஒன்றுகூடி காலை 10 மணி முதல் மாலை 10 மணி வரை உபவாசித்து ஜெபித்து பிதாவை நோக்கி கண்ணீர் விட்டு பிரார்த்தித்திருக்கிறார்கள். தொடர்ந்து 7 மணிநேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடு முழுவதும் 1300 இடங்களில் இருந்து வீடியோ வழியாக பலரும் கலந்துகொண்டனர். கான்சாஸ் மாகாண கவர்னர் சாம் பிரவுன்பேக் இக்கூட்டத்தில் நேரில் பங்குபெற்று பேசினார். புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் வீடியோ வழியாக இந்த உபவாச ஜெபத்தில் கலந்து கொண்டார்.கடவுள் தாமே அவர்கள் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்பாராக.

இக்கூட்டத்திற்கு கிறிஸ்தவர்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் இருந்தன.பல்வேறு டினாமினேசன்களைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர்களும் இதில் கலந்து கொள்வதாக
இருந்ததால் சில கிறிஸ்தவ போதகர்மார்களும் விசுவாசிகளும் இக்கூட்டத்தில் சுவிசேச கிறிஸ்தவர்கள் கலந்து கொள்ளக்கூடாது என தங்கள் சகாக்களை எச்சரித்திருந்தனர். ஆனாலும் கர்த்தர் மகிமையாய் வெற்றிச் சிறந்தார்.ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியே குறைகூறியே நாம் கிறிஸ்தவர்களிடையே ஒருமைப்பாடு இல்லாமல் போனது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.யோவான் 17:23-ல் ஒருமைப்பாட்டில் நாம் தேறினவர்களா யிருக்கும்படிக்கு வேண்டுகிறார் இயேசப்பா. சரீரத்தில் ஒவ்வொரு அவையவங்களுக்கும் ஒவ்வொரு வேலை இருப்பதை பலர் புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் எல்லாவற்றிற்கும் தலையானவர் இயேசுகிறிஸ்துவே. எல்லா சபைகளுக்கும் டினாமினேசன்களுக்கும் தலையானவர் இயேசு கிறிஸ்துவே.ஒரு சபைகாரர்களை நீங்கள் பரலோகம் போகமாட்டீர்கள் என இன்னொரு சபைகாரர்கள் நியாயம் தீர்ப்பது எப்படி? கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. அவர்களுக்கும் கிறிஸ்துதானே தலையானவர். ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே.(1கொரி:12:5)

யாரோ சொன்னது போல “In essentials, unity; in non-essentials, liberty; in all things, charity.”-யாக நாம் இருக்கலாம்.அதாவது முக்கியமானவற்றில் நாம் ஒரே மனமாகவும்,முக்கியமில்லாவற்றில் விட்டுக்கொடுத்தும்,பிற எல்லாவற்றிலும் தாராளமாகவும் நாம் இருப்போம்.கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment