Monday, August 29, 2011

சிருஷ்டிகளே! சிருஷ்டிகரைத் தொழுங்கள்

சில கடவுள்கள்

1992 ஜூலை 12-ம் தியதியிட்ட Indian Express Sunday magazine-ல் "M.G.R is the Myth" என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. சென்னையில் கலைநுட்பத்துடன் கூடிய MGR Temple. இயேசுவின் உருவத்தில் எம்.ஜி.ஆர் முகம் கொண்ட போட்டோ. நேற்றைய மனிதன் இன்றைய கடவுளாக.அதனால் தான் சினிமா காரன் இப்படி கேட்டான். கடவுள் மனிதனை படைத்தானா இல்லை மனிதன் கடவுளை படைத்தானா என்று.



1992 ஜூலை 13 தினமலரில் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. அதில் “ஸ்ரீ கிருஷ்ண லஹரி ஜீவிக்கிறார்” என்றொரு வாசகம். மரித்துப்போன மனிதன் தேவாசீர் லாரியின் மனுஜோதி ஆசிரமம் பற்றிய விளம்பரம் அது.
கல்கி அவதாரமாக அவரை கருதுகிறார்கள்.

1992 நவம்பர் 5-ல் மாலைமலரில் வெளியான செய்தி. திருச்சி மாவட்டத்தில் நடிகை குஷ்புவுக்கு குஷ்பாம்பிகை அம்மாள் கோவில். புத்தர்,ஏசு,காந்திக்கு பிறகு இந்த அம்மணியாம். சினிமா மூலம் உலகத்தை திருத்த வந்த தேவதை என பக்தர்கள் தெரிவித்திருந்தனர்.

2008 மார்ச்-ல் ”கொசுவுக்கு கோவில் எழுப்பிய அதிசய டாக்டர்” என தினமலர் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. கொசுக்களால் ஏற்படும் தீமைகள் குறித்து கிராம மக்களிடம் செய்து வந்த பிரசாரம், கண்காட்சி, கருத்தரங்கு எதுவுமே கைகொடுக்கவில்லை. இப்படிப்பட்ட கொசுவுக்கு கோவில் தான் கட்ட வேண்டும் என்று ஒரு டாக்டர் முடிவு செய்தார். கொசுவுக்கு அவர் கட்டிய கோவில், இப்போது நல்ல பலன் தருகிறதாம்.இது நடந்தது ஆந்திர மாநிலத்தில் உள்ள மொக்ஷாகுந்தம் என்ற கிராமத்தில். டாக்டர் பெயர் சதீஷ் குமார்.

2010 பிப்ரவரியில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் ஒரு பேட்டியில்“சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டின் கடவுள்” என்று புளகாங்கிதப்பட்டு கூறியிருந்தார்.


2010 ஏப்ரல்-ல் மகாத்மா காந்திக்குக் கோவில் – குஜராத் அரசு முடிவு

2010 ஆகஸ்டில் நக்கீரன் இதழ் “தேளுக்கு கோவில் கட்டி கும்பிடும் கிராமம்” கர்நாடக மாநிலம் யாக்கீர் நகரின் அருகே உள்ள பன்டுகூர் கிராமத்தில் தேளை தெய்வமாக கருதி வழிபடுகிறார்கள் என கட்டுரை வெளியிட்டிருந்தது.




2010 அக்டோபர் ”எம்ஜிஆருக்கு சென்னையிலும் கோயில்!” கட்டுரை

2010 அக்டோபர் ”மதுரை அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு கோயில்!” கட்டுரை

2011 ஏப்ரல் 26-ல் டைம் பத்திரிகை சாய் பாபாவின் மறைவை ஒட்டி ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதன் தலைப்பு ”The Man Who Was God Is Dead”

2011 ஆகஸ்ட் 15 ”சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!” கட்டுரை

ரோமர் 1:25 சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.

சிந்திப்பீர் மனிதர்களே! படைப்புகளை வணங்குவதை விட்டுவிட்டு உங்களைப் படைத்தவனை வணங்குங்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment