Wednesday, June 11, 2014

என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான‌ உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக‌ கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்க‌ப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது. 
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment