Showing posts with label New Testament. Show all posts
Showing posts with label New Testament. Show all posts

Friday, January 27, 2023

அந்த கால பெர்கமு (Pergamon) பட்டணம்.

 பைபிளில் வெளிப்படுத்தின விசேஷம் புத்தகம் குறிப்பிடும் அந்த கால பெர்கமு (Pergamon) பட்டணத்தின் 10,000 பேர் அமரும் விதத்திலான ஒரு களியாட்டு அரங்கம். இப்போது இது துருக்கி நாட்டிலுள்ளது.



ரோமிலுள்ள "The Appian way" எனும் மிக பழமையான‌ சாலை.

 ரோமிலுள்ள "The Appian way" எனும் இந்த‌ மிக பழமையான‌ சாலை கிமு 312 ல் Appius Claudius Caecus என்பவரால் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டிலுள்ளது. இந்த சாலையை பற்றிய குறிப்பு பைபிளில் வருவது உங்களுக்கு தெரியுமா? அப்போஸ்தலர் 28:15.



இரத்தசாட்சியாக மரித்த‌ பர்த்தொலொமேயு.

 இந்தியாவுக்கு வந்ததாக கருதப்படும் இன்னொரு இயேசுவின் சீஷனின் பெயர் பர்த்தொலொமேயு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் இவர் ஊழியங்கள் செய்ததாக‌ செவிவழி செய்திகள் உள்ளன. ஆனால் இவரது இறுதிகாலம் ஆர்மேனியாவில் அமைந்தது. அங்கே அவரை உயிரோடு தோல் உரித்து கொன்றதாக சொல்லப்படுகிறது. படத்தில் நீங்கள் காண்பது இத்தாலி மிலான் நகரிலுள்ள‌ தன் தோல்களை தானே தோள்களில் சுமக்கும் உயிரோடு தோல் உரிக்கப்பட்ட பர்த்தொலொமேயுவின் சிலை. இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்த‌ பர்த்தொலொமேயுவின் தோல்கள் உரிந்து தொங்குவதை படத்தில் காணலாம். சீஷன் பர்த்தொலொமேயுவுக்கு இன்னொரு பெயர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது அது தெரிந்தோர் கமெண்டில் குறிப்பிடுங்கள், இயேசு இவரை பற்றி என்ன சாட்சிகொடுத்தார் என்பதையும் குறிப்பிடுங்கள்.  பதில் கீழே.

நாத்தான்வேல்.
யோவான் 1:47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

அழகிய கால்வாய் (Canal) உள்ள‌ பட்டணம்.

 கிரீஸ் நாட்டிலிருக்கும் இந்த அழகிய கால்வாய் (Canal) உள்ள‌ பட்டணத்துக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு நிரூபங்கள் எழுதினாரென்றால் அது எந்த பட்டணம் என உங்களால் கணிக்க முடிகிறதா?  பதில் கீழே.

கொரிந்து பட்டணம்

"சீலோவாம் குளம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 பைபிள் சம்பவங்களை நிரூபிக்கும் இன்னொரு அகழ்வாய்வு இஸ்ரேலிலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தான் "சீலோவாம் குளம்". இயேசு வாழ்ந்த‌ காலத்தியது (யோவான் 9:7). இஸ்ரேல் செல்லும் சுற்றுலா பயணிகளும் அதனை கண்டுகளிக்க சீக்கிரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



"ஆவியின் கனி" vs "மாம்சத்தின் கிரியைகள்".

 "ஆவியின் கனி" ஒன்பது என்பது உங்களுக்கு தெரியும். பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கும் போது இந்த ஒன்பது ஆவியின் கனி கொடுப்பீர்கள். ஆவியின் கனிக்கு எதிர்பதம் "மாம்சத்தின் கிரியைகள்" என்பது உங்களுக்கு தெரியுமா? அவைகள் எத்தனை? அவைகளை வரிசைபடுத்த முடியுமா?. பதில் கீழே.

கலாத்தியர் 5:19 - 21
மாம்சத்தின் கிரியைகள், விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே.


"தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு.

 படத்தில் நீங்கள் காண்பது யோப்பா பட்டணத்திலுள்ள "தோல் பதனிடுகிறவனாகிய சீமோனின்" வீடு. இந்த வீட்டில் வந்து தங்கிய இயேசுவின் சீசர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? அந்த சீசர் இவ்விடத்தில் ஒரு தரிசனம் காண அதுமுதல் இயேசு யூதருக்கானவர் மட்டுமல்ல, உலகமுழுமைக்கும் அனைத்து ஜனத்துக்கும் கர்த்தரானவர் என அறிந்து கொணடார் அந்த சீசர். வேதாகாமத்தில் இந்த சம்பவம் எங்கு வருகிறது சொல்லமுடியுமா? பதில் கீழே.




சீமோன் பேதுரு.
அப்போஸ்தலர் 10ஆம் அதிகாரத்தில் வருகிறது

Saturday, September 25, 2021

முப்பாட்டன் பெயரும் கொள்ளுபாட்டன் பெயரும்.

சிலருக்கு பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு முப்பாட்டன் பெயர் தெரியும். சிலருக்கு கொள்ளுபாட்டன் பெயர் கூட‌ தெரியும். ஆனால் எவருக்கும் இயேசுவின் வம்சவரலாறு போன்று ஆதி மனிதனிலிருந்து தான் வரையுள்ள‌ வம்சவரலாறு தெரியாது. உலகின் எந்த மாபெரும் மகானுக்கும் அப்படி தெரியாது. அதுதான் இயேசு கிறிஸ்துவின் விசேஷம்.



இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம்.

இயேசு யோவான் ஸ்நாபகனால் ஞானஸ்நானம் பெற்றதாக கருதப்படும் இடம் இது.ஜோர்தான் நாட்டிலுள்ள இந்த இடம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில் வருகிறது.



கி.மு கி.பி His Story.

 கிறிஸ்துவின் வாழ்க்கை கதையே (His story) வரலாற்றை கி.மு கி.பி என இரண்டாக பிரிப்பதால் வரலாற்றை History என்றார்கள்.



இன்றைக்கும் இருக்கும் பைபிள் லாசரு கல்லறை.

 இயேசு உயிரோடு எழுப்பிய பைபிள் கால லாசரு என்பவரின் கல்லறை. இது இன்றைக்கும் ஜெருசலேம் நகருக்கு அருகே பெத்தானியா என்கின்ற ஊரில் இருக்கிறது.



இன்றைக்கும் இருக்கும் மார்ஸ் மேடை.

 இன்றைக்கும் இருக்கும் பவுல் பிரசங்கம் செய்த ஏதென்ஸ் பட்டணத்தின் மார்ஸ் மேடை. அப்போஸ்தலர் நடபடிகள் 17.



"அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற பலிபீடம்.

 "அறியப்படாத தேவனுக்கு" என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தை ஏதென்ஸ் நகரில் பவுல் கண்டதாக நாம் அப்போஸ்தலர் 17:23 ல் படிக்கிறோம். படத்தில் காணும் அந்த பலிபீடம் 1820 ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது இப்போதும் ரோம்நகர அருங்காட்சியகத்தில் உள்ளது.


Thursday, January 07, 2021

இன்றைக்கும் இருக்கும் பைபிளில் குறிப்பிட்டுள்ள‌ தெரு.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தெரு சிரியா தேச‌த்தில் டமாஸ்கஸ் நகரில் உள்ள நேர்தெரு. பைபிளில் அப்போஸ்தலர் 9:11 ல் "அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தெருவானது இன்றைக்கும் டமாஸ்கசில் அப்படியே உள்ளது பைபிள் எத்தனை உண்மை என்பதற்கு சான்றாக உள்ளது.