இந்தியாவுக்கு வந்ததாக கருதப்படும் இன்னொரு இயேசுவின் சீஷனின் பெயர் பர்த்தொலொமேயு. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் இவர் ஊழியங்கள் செய்ததாக செவிவழி செய்திகள் உள்ளன. ஆனால் இவரது இறுதிகாலம் ஆர்மேனியாவில் அமைந்தது. அங்கே அவரை உயிரோடு தோல் உரித்து கொன்றதாக சொல்லப்படுகிறது. படத்தில் நீங்கள் காண்பது இத்தாலி மிலான் நகரிலுள்ள தன் தோல்களை தானே தோள்களில் சுமக்கும் உயிரோடு தோல் உரிக்கப்பட்ட பர்த்தொலொமேயுவின் சிலை. இயேசுவுக்காக இரத்தசாட்சியாக மரித்த பர்த்தொலொமேயுவின் தோல்கள் உரிந்து தொங்குவதை படத்தில் காணலாம். சீஷன் பர்த்தொலொமேயுவுக்கு இன்னொரு பெயர் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது அது தெரிந்தோர் கமெண்டில் குறிப்பிடுங்கள், இயேசு இவரை பற்றி என்ன சாட்சிகொடுத்தார் என்பதையும் குறிப்பிடுங்கள். பதில் கீழே.
நாத்தான்வேல்.
யோவான் 1:47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
0 comments:
Post a Comment