சமுத்திரத்தின் உள்ளே பெரிய மலைகளும் பர்வதங்களும் உள்ளன என இப்போது விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். உண்மையில் பூமியின் மிக உயரமான மலையை சமுத்திரத்தின் சில பகுதிகளில் எடுத்து எறிந்தால் அது மூழ்கிப்போகுமாம். அவ்வளவு ஆழமான பகுதிகள் கடலினுள் உள்ளன. இது இப்படியிருக்க சமுத்திரத்தினுள் பர்வதங்களின் அடிவாரங்கள் இருக்கின்றன என எடுத்துரைத்த ஒரு வேதாகம தீர்க்கதரிசி யாரென உங்களால் ஊகிக்க முடிகின்றதா? பதில் கீழே.
யோனா தீர்க்கதரிசி.
யோனா 2:6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்.
0 comments:
Post a Comment