இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் சம்பங்கி சாகுபடி| Dinamalar
தேனி: தேனி வயல்பட்டி விவசாயி ராஜா 33, இஸ்ரேல் வேளாண் உயர் தொழில்நுட்பத்தில் 10 ஏக்கரில் சம்பங்கி பயிரிட்டு லாபம் ஈட்டி வருகிறார்.இவர் கோவில்பட்டி, கீழப்பூலானந்தபுரம், தேனி வயல்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் அதிக பரப்பில் இஸ்ரேல் நாட்டின் உயர் தொழில்நுட்பத்தில் விவசாயம் செய்து வருகிறார். வயல்பட்டியில் 'நிலப்போர்வை' (mulching technology) தொழில்நுட்பம் மூலம் சம்பங்கி பயிரிட்டுள்ளார்.அவர் கூறியதாவது:ஆண்டு முழுவதும் லாபம் தரக்கூடிய பயிரை தேர்வு செய்வதில் சற்று குழப்பம் இருந்தது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் தொழில்நுட்பம் குறித்து அறிந் தேன். தற்போது வயல்பட்டியல் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் நிலப்போர்வை தொழில்நுட்பத்தில் சம்பங்கி பயிரிட்டுள்ளேன். கிழங்கு நட்டு 2 மாதத்தில் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து மூன்றாண்டுகள் அறுவடை தருவதால் நமக்கு இரட்டிப்பு லாபம். முக்கியமாக, 'மல்ச்சிங் ஷீட்' போடுவதால் கிழங்குச் செடியோடு வளரும் களைச் செடிகள் வளர்வதை தடுத்து விடும். சொட்டிநீர் பாசனத்தில் ஈரப்பதம் மண்ணில் நீடித்து தங்க வைப்பதுடன், நீர்ச்சத்து வெப்பத்தில் நீர்த்துப்போக வாய்ப்பில்லை. அதனால் தொடர் அறுவடைக்கு எந்தவித பாதிப்பும் வந்தது இல்லை.செலவு குறைவுஏக்கருக்கு விதைப்புக்கூலி, சொட்டுநீர் குழாய்கள் அமைப்பது, நிலப்போர்வை அமைப்பது என ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவாகிவிடும். ஆனால் ஒரு ஏக்கரில் அந்த செலவுக்கு லாபமாக ரூ.2.50 லட்சம் கிடைக்கும். மூன்றாண்டுகள் தொடர் அறுவடைக்கு தொடர் பராமரிப்பும் அவசியமாக ஒன்று. என்னைப்போன்ற குத்தகை விவசாயிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மானியம் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
0 comments:
Post a Comment