Thursday, June 15, 2006

யேசுவும் கர்த்தரும் வேறா?

பகுத்தறிவாளன் சார்,
முதலாவதாக தங்கள் விவாதங்களுக்கு நடுவே நான் புகுவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நினைக்கிறேன்.என் சிறிய அறிவுக்கு எட்டிய வரையான
எனது பதில்கள் கீழே.

கேள்வி:யேசுவும் கர்த்தரும் வேறா?

பதில்:இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை-இரண்டும் தான்.
யேசு பூமியில் மனிதனாய் வாழ்ந்திருந்த காலத்தில் மனிதனாகவே வாழ்ந்திருந்தார்.சராசரி மனிதனுக்கு இருந்த அன்றாட தேவைகள்,சம்பவங்கள்,பசி,வலி,கண்ணீர்,உணர்வுகள் அவர்க்கும் இருந்தது.அவரே கடவுள் என்றால் ஏன் அவரும் ஜெபம் செய்திருக்க வேண்டும்.பைபிளில் அவர் 40 நாள் உபவாசம் இருந்து ஜெபம் செய்தார் என்று பார்க்கிறோமே.ஆக அவர் பூமியில்இருந்த நாட்களில் "மனிதனாகவே" இருந்தார்.ஜெபம் செய்வது எப்படி என செய்து காட்டினார்.தன் கடைசி நொடிவரை மனித குணத்தை அவர் இழக்கவில்லை.ஆனால் he represented God.பொதுவாக இவ்வுலகில் power of attrony கொடுத்தவரும் கொடுக்கப்பட்டவரும் தனி மனிதர்கள். ஆனால் சட்டப்படி அவர்கள் இருவரும் ஒருவரே.கணவனும் மனைவியும் வேறா? இக்கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை இரண்டும் தானே.

ஆக ஒரு மனிதனான யேசுவும் கர்த்தரும் வேறு.
யோவான்:16:28. நான் (யேசு) பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டு பிதா(கர்த்தர்)வினிடத்திற்குப் போகிறேன் என்றார்.

ஆனால் ஆவியில் யேசுவும் கர்த்தரும் ஒன்று
யோவான்:17:21. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை (யேசு)
அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும்
(கர்த்தர்) இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

கடவுள் தன்னை மனிதனாக தாழ்த்தினார்.
பிலிப்பியர் 2:8 அவர் (யேசு) மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,
அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே
தாழ்த்தினார்.

யோவான்:14
8. பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே(யேசு), பிதாவை எங்களுக்குக் காண்பியும்,
அது எங்களுக்குப் போதும் என்றான்.9. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
10. நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா?
நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை;
என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.11. நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.

கேள்வி:இயேசுவை கர்த்தர் காப்பாற்றியதாக உள்ளதே?
இயேசுவை கர்த்தர் சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்றினார்?


பதில்:யேசுவை கர்த்தர் காப்பாற்றியிருந்தால் யேசுவை யூதர்கள் கொன்றிருக்க முடியாதே.எப்படியாவது தப்பியிருப்பாரே.சிலுவை மரணம் நிகழ்ந்திருக்காதே.அதாவது யேசு உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறாமலே போயிருக்கும்.

தொடரும் நம் தேடல்கள் ஆரொக்கியமாய் அமைய வாழ்த்துக்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment