Thursday, November 15, 2007

வேதாகமத்தில் வரும் மயில்கள்

I இராஜாக்கள்:10:22.
(சாலோமான்) ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

II நாளாகமம்:9:21.
(சாலோமான்) ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

இந்திய தேசிய பறவையான மயில் பற்றிய குறிப்புகள் புனித வேதாகமத்தில் காணக்கிடைக்கின்றன. அவை சில ஆச்சர்யமான உண்மைகளை வெளிகொணர்கின்றன. மேற்கண்ட பைபிள் வாக்கியங்கள் கிமு 990 வாக்கில் இஸ்ரேலின் ராஜாவாயிருந்த சாலோமோனின் காலத்தில் நடந்தவை. இங்கு தர்ஷீஸ் என குறிப்பிடப்படுவது கேரள மலபார் துறையாகவோ அல்லது இலங்கையின் இன்றைய ஈழப் பகுதியாகவோ இருக்கலாம் என கணிக்கிறார்கள். இது அந்தகால இஸ்ரேலர்களுக்கு தமிழர்களோடு இருந்த கப்பல்கள் வழி வியாபாரத்தொடர்பை குறிப்பதாக கருதலாம். ஏனெனில் எபிரேய மொழியில் மயிலை "Tuki" என்கிறார்கள். அது தமிழ் வார்த்தை "தோகை" யிலிருந்து வந்ததாகும். தமிழ் இலக்கியங்களான மலைபடுகடாமும் குறிஞ்சிபாட்டும் மயில்களை தோகை எனும் வார்த்தையாலே குறிப்பிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸோடு பயணம் போன லுயிஸ் டெ டாரெஸ் (Luis de Torres) எனும் யூதர் மேல்நாடுகளில் கால்வைக்கும் போது அங்கு வான்கோழிகளை கண்டு அவற்றை மயிலென நம்பி "Tuki" என அழைத்தாராம். அது பிற்பாடு Turkey என ஆனது. இன்றைக்கும் அமெரிக்காவில் இந்த டர்கி வான்கோழி நன்றிதெரிவித்தல் (Thanksgiving) நாளின் ஸ்பெஷல் மீல்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment