Tuesday, April 14, 2015

உண்மையான சிநேகிதர்கள் உண்டு. சுயநலம் கொண்ட சந்தர்ப்பவாதிகளும் உண்டு. இஸ்ரேல் எத்தனை முறை சொல்லியும், சொல்லச் சொல்ல கேட்காமல் ஈரான் பக்கமாய் சாய்ந்து சமாதானம் சமாதானம் என‌ அணு சக்தி பேரம் பேசிய‌து அமெரிக்கா. அமெரிக்கா, ஈரான் இடையே நிலவும் கசப்பான உறவுகளை மாற்ற மிகச்சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அப்போது அமெரிக்க ஜனாதிபதியும் திருவுளம் பற்றினார். அப்படியே சந்தடி சாக்கில் எங்கள் மீதுள்ள‌ பொருளாதார தடைகளையும் நீக்கினால் தான் நாங்கள் நல்ல பிள்ளைகளாக இருப்போம் என சொல்லியது ஈரான். இன்றைக்கு இன்னொரு செய்தி வந்திருக்கிறது, நிகழ் ஆண்டுக்குள் ஈரானுக்கு, எஸ் 300 என்ற ஏவுகணைகளை சப்ளை செய்ய ரஷ்யா முடிவு என்று. நண்பன் ரஷ்யா, நண்பனின் எதிரி அமெரிக்கா இரண்டு பக்கமும் நன்றாகவே கோல் போடுகிறது ஈரான், ஆனால் எங்களுக்கு இரட்டை முகம் கிடையாது- எதிர் தரப்பினர் மதிப்பது போல் அணு ஒப்பந்தத்தை நாங்களும் மதிப்போம் என வசனத்துக்கு மட்டும் ஈரானிடமிருந்து குறைச்சல் இல்லை. குட்டி சாத்தான் இஸ்ரேலையும் பெரிய சாத்தான் அமெரிக்காவையும் ஒழிப்பது தான் ஈரானின் நோக்கம் என இஸ்ரேலின் தலைமைக்கு தெரிகிறது, ஆனால் அமெரிக்க தலைமைக்கு தெரியலையே. அதனால் தான் வேதம் சொல்லுகிறது பிரியமானவர்களே, .. நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள் என்று. சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான் என்ற வேத வார்த்தை அமெரிக்க தலைமைக்கு என்று புரியுமோ?.(I யோவான் 4:1, நீதிமொழிகள் 17:17)


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment