Tuesday, January 29, 2008

மண் கூடு

ஈரம் கலந்த மண்ணை பிசைந்து கொண்டிருந்தன அந்த சின்னஞ் சிறு கரங்கள். அப்படியே மண்ணை கையால் பிடித்து, குவித்து அப்பி சிறு வீடு ஒன்றை எழுப்பிக்கொண்டிருந்தான் கடற்கரை மணலில். ரம்மியமான சூழல். கடலலைகளின் வேகம் சிறுக சிறுக கூடிக்கொண்டே வந்தது. மாலை நேர வெயில். வரவேற்ப்பறை, நடுவறை, படுக்கையறை, சமையலறை கட்டி மேல்மாடிக்கு வந்திருந்தான் சிறுவன்.கொண்டு வந்திருந்த சிறு சிறு பிளாஸ்டிக் சாதனங்கள் அவன் மண் வீட்டை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தன. கோபுரத்தில் சின்னதாய் ஒரு பறக்கும் வண்ணக் கொடி.

இப்போது கடலலைகளின் சூரமும் அதிகமாக தொடங்கிவிட்டது.அப்பா வரவும் நேரமாகிவிட்டது.சிறு வீடு கட்டி அழகு பார்த்துக் கொண்டிருந்தான் அச்சிறுவன். கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து விட்டார்கள்.அப்பாவை எட்டிப் பார்க்கும் நேரத்தில் எங்கிருந்து தான் வந்ததோ அந்த ராட்சத பேரலை மொத்தமாய் சிறுவனின் வீட்டை வாரிக்கொண்டு போய்விட்டது. கை கொட்டி சிரித்தான் சிறுவன் சத்தமாய். மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. சுத்தமாய் காணாமல் போயிருந்த இடிபாடுகளை சுட்டி காட்டியபடியே ஓடோடி வந்த சிறுவன் இறுக்கமாய் அப்பாவின் கரங்களை பற்றிக்கொண்டான். காரில் அமர்ந்திருந்த போது மீண்டும் ஒருமுறை சிரித்துக் கொண்டான்.உண்மையான வீடு தூரத்தில் அல்லவா இருக்கிறது.அது அவன் அப்பா கட்டியது.

யோவான் 14:2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.

மத்தேயு 7:25. பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment