Tuesday, March 22, 2011

நீ எங்கே செல்கிறாய்?


இந்த உலகமாகிய யாத்திரை பயணத்தில் நாம் எங்கோ ஓரிடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். எனவே தான் நாம் துரிதமாக எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். உயிர் நம் உடலில் இருக்கும் வரை அங்கும், இங்குமாக செல்வோம். ஆனால் நம் (உயிர்) ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு போகும் போது நாம் எங்கே செல்வோம், மோட்சமா? நரகமா? நிச்சயமாக இந்த உலகம் நாம் நினைக்கிறபடி மோட்சமோ, நரகமோ கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் போது நாம் நரகத்தில் இருக்கிறோம் என்றும், சந்தோஷத்தை அனுபவிக்கும்போது மோட்சத்தில் இருக்கிறோம் என்றும் சிந்தனை செய்வது தவறு.மோட்சம்,நரகம் என்று ஒன்று உண்டு.

வானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மீண்டுமாக இந்த உலகத்தில் வந்து துன்மார்க்கனையும், நீதிமான்களையும் வெவ்வேறாக பிரித்து அவர், அவர்கள் செல்ல வேண்டிய வழியை அவர்களுக்கு தெரிவிப்பார். இது தான் உண்மை. இந்த பூமியிலே நாம் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமற்ற பாவங்களை செய்து வாழ்ந்தோமானால் நாம் துன்மார்க்கர். இயேசு கிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து எழுந்தார் என்றும், மீண்டுமாக நம்மை சேர்க்க வருவார் என்றும், என்னுடைய பாவங்களுக்காகத்தான் கல்வாரி சிலுவையில் மரித்தார் என்றும் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறவனே நீதிமான்.

நரகம் எப்படி இருக்கும் என்றால், அங்கே புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும் (மாற்.9:44) புழுக்களே படுக்கை பூச்சிகளே போர்வை, நரகம் பாதாளம், இருள், நரகத்தில் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிறதான புறம்பான இருள். மோட்சத்துக்கும், நரகத்திற்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கும். நரகம் பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி. ஆனால் மோட்சமோ தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம் (11 கொரி.5:1) பரலோகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. நீதிமான்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள்.

எனவே அருமையான சகோதரனே, சகோதரியே இன்றே சிந்தனை செய்யுங்கள். நாம் செல்லும் வழி எது, நம்மை அறியாமலே நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா? மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டியது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு அடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13) உன்னுடைய பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சொல்லி விடுதலையை பெற்றுக் கொள். மீண்டும் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள். இப்படி செய்வதை விட்டுவிட்டு தேவன் இல்லை, மோட்சம் இல்லை, நரகம் இல்லை, நியாயத்தீர்ப்பு இல்லை என்றும் சொல்லி உன்னை தேற்றிக் கொள்வாயானால் என்றென்றைக்கும் அழியாத நித்திய, நித்தியமான நரகத்துக்கு உரியவர்களாகவே மாறிவிடுவோம். இதுவே இரட்சண்ய நாள், இன்றைக்கு மீட்பை பெற்றுக்கொண்டு பரம சந்தோஷத்தை அடைவீர்களாக.
Interactive Picture

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment