"Organized religion 'will be driven toward extinction' in 9 countries, experts predict",
”மதம் அழியுமா”,
”மத நம்பிக்கையே இல்லாமல் வாழும் மக்கள்”
- இவை சமீபத்திய செய்தி தலைப்புகள். கிறிஸ்துவின் இரண்டாம் வருகை நெருங்கும் காலகட்டத்தில் பூமியிலே கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கை அல்லது விசுவாசம் குறைந்து போகும் என இயேசு கிறிஸ்து நமக்கு முன்னறிவித்துள்ளார்.லூக்கா 18:8-ல் இயேசு இப்படியாகச் சொன்னார் ”ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ”. இதற்கேற்ப இன்றைய செய்தித்தாட்களின் செய்திகளும் இதையே உரைக்கின்றன,
உலகின் ஒன்பது நாடுகளில் சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில் அந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கையே இல்லாமல் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இதனால் அவற்றில் தற்போது இருக்கும் மதங்கள் விரைவில் காணாமல் போய் விடும் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, கனடா, செசன்ய குடியரசு, பின்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய ஒன்பது நாடுகளில் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
இந்நாடுகளில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு அங்குள்ள மக்களின் மத விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி இந்நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் மத நம்பிக்கை இல்லாமலேயே வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.
இப்படியே போனால் இன்னும் சில ஆண்டுகளில் அங்கு மதங்களே இல்லாமல் போய்விடும் என்று அந்த ஆய்வு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் டல்லஸ் நகரில் நடந்த ஓர் கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டது.
அதன்படி மிகக் குறைந்தபட்சமாக நெதர்லாந்தில் 40 சதவீதம் பேரும், அதிகபட்சமாக செசன்ய குடியரசில் 60 சதவீதம் பேரும் மதநம்பிக்கை அற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த நிபுணர்கள் சிலர் இது ஒரு சாதாரண கணக்கு தான்.
அதாவது நாம் மேற்கொள்ளும் ஒரு காரியத்தால் ஏதாவது பயன் விளைந்தால் அக்காரியத்தை நாம் தொடர்ந்து செய்வோம். உதாரணமாக ஸ்பானிய மொழி பேசுவதால் விளையும் பயன் பெரு நாட்டில் தற்போது வழக்கழிந்து வரும் கொச்சுவான் மொழியைப் பேசுவதால் விளையும் பயனை விட மிக அதிகம். இதே கணக்கை மதநம்பிக்கையிலும் நீங்கள் வைத்துப் பார்க்கலாம் என்று தெரிவித்தனர்.
Luke 18:8 “when the Son of Man comes, will He really find faith on the earth?”
மத்தேயு 7:14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.
மத்தேயு 20:16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
- மனுஷகுமாரன் வரும்போது உன் சபையிலே விசுவாசத்தைக் காண்பாரோ?
- மனுஷகுமாரன் வரும்போது உன் குடும்பத்திலே விசுவாசத்தைக் காண்பாரோ?
- மனுஷகுமாரன் வரும்போது உன் இருதயத்திலே விசுவாசத்தைக் காண்பாரோ?
0 comments:
Post a Comment