Wednesday, March 30, 2011

இருதயத்தில் சமாதானம்

உம்மை உறுதியாய்ப் பற்றி கொண்ட மனதையுடையவன், உம்மையே நம்பியிருக்கிறபடியால் நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக் கொள்வீர் (ஏசா.26:3) சமாதானத்தை தர வல்லமையுள்ளவர் ஒருவரே. அவர்தான் சமாதான பிரபுவாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்கு கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம், கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. (யோவா.14:27) உலகத்தில் எங்கு பார்த்தாலும் சமாதானம் இல்லை. வியாதிகள், வறுமைகள், கொலைகள், கொள்ளைகள் யாவையும் பார்க்கும் போது மனிதர்களாகிய நமக்கு சமாதானம் இல்லை. என்றைக்கு எப்பொழுது யாருக்கு எது நடக்கும் என்ற கேள்விக்குறியோடு மனுக்குலம் வாழ்கிறது. இவைகள் எல்லாவற்றிலும் சமாதானத்தைக் கொடுக்கும் தேவன் நமக்கு உண்டு. எந்த சூழ்நிலையிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரை உறுதியாய் பற்றிக் கொண்டவர்கள் பூரண சமாதானத்துடன் வாழ முடியும். அருமையான மகனே, மகளே உனக்கு சமாதானம் இல்லையா, வாழ்க்கையில் கைவிடப்பட்டவளாக கலங்குகிறாயா, பிள்ளைகள் உன்னை கைவிட்டுவிட்டனரா, பள்ளி பாடங்களை படிக்கும்போது சரியாக படிக்க முடியவில்லையே என கலங்குகிறாயா வீட்டுக்குப் போனாலும் நிம்மதி இல்லை, வேலையிலும் நிம்மதி இல்லை, பிள்ளைகளின் வியாதி, வியாபாரத்தில் தோல்வி, எவ்வளவோ ஆண்டு ஆகியும் குழந்தை செல்வம் இல்லை என்று ஏங்குகிறாய் அல்லவா, இதினிமித்தம் உனக்குள் ஒரு கலக்கம் ஏற்படுகிறது அல்லவா, அந்த கலக்கங்களை மாற்றி இயேசு கிறிஸ்து உனக்கு சமாதானத்தை தருவார். உனக்கு சமாதானத்தைத் தருவதற்காகவே கல்வாரி சிலுவையில் தன்னுடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினார். இன்று மகனே, மகளே நான் உன்னை நேசிக்கிறேன், உன்னை தாயின் வயிற்றிலே நீ உருவாகும் போதே உன்னை எனக்கென்று வேறு பிரித்தேன். நீ என்னுடையவன்(யவள்) எனவே இயேசு கிறிஸ்துவாகிய என்னை உன் இருதயத்தில் ஏற்றுக்கொள். நீ என்னை நம்பு என்று அழைக்கிறார். உன்னுடைய கலக்கத்தை மாற்றுவார்.
அருமையான தேவனுடைய பிள்ளையே கர்த்தரிடம் உன் பாவத்தை அறிக்கை செய்து விட்டுவிடு. இனி பாவம் செய்யாதே. பாவம் செய்யும் போது நமக்கு அந்த பாவம் தற்பொழுது சிறிது சமாதானம் இருப்பது போல் காணப்படும். ஆனால் சிறிது நேரத்தில் அந்த பாவம் நமக்கு சமாதானத்தையும், சந்தோஷத்தையும் தருவதில்லை. அதினிமித்தம் நம் இருதயம் கிலேசப்படும், எனவே கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ எப்படிபட்ட வனாகவும்(வளாகவும்) காணப்பட்டாலும் கர்த்தராகிய இயேசு உன்னை நேசிக்கிறார். உனக்கு சமாதானத்தை தருவார். இன்றே கர்த்தரிடம் வருவாயாகில் கீழே கொடுக்கப்பட்ட ஜெபத்தை விசுவாசத்தோடு இயேசுவிடம் சொல்லி ஜெபி.

ஜெபம் :
அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே நான் (உங்கள் பெயரை சொல்லவும்) வந்திருக்கிறேன். என்னுடைய எல்லா பாவங்களையும் மன்னியும். என்னை ஏற்றுக் கொள்ளும். இன்று முதல் நான் உம்முடைய பிள்ளை, எனக்கு சமாதானத்தை தாரும், நான் கையிட்டுச் செய்கிற எல்லாவற்றையும் ஆசீர்வதியும், வியாதிகளை மாற்றும், தோல்விகளை ஜெயமாய் மாற்றும், என் பிள்ளைகளுக்கு ஞானம் தாரும், சமாதானத்தின் தேவன் என்னை ஆட்கொண்டு வழி நடத்தும்படி ஜெபிக்கிறேன். ஆமென்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment