Wednesday, August 12, 2015

டாக்டர் புஷ்பராஜ் ஐயா அவர்கள் #யோகா விசயத்தில் எடுத்துக்கொண்டுள்ள மென்மையான நிலைப்பாடு மனதை வருத்துவதாக இருந்தது."யோகா என்பது ஜெபம் அல்ல- வெறும் உடற்பயிற்சி அவ்வளவே.டிரில்மாஸ்டர் உடற்பயிற்சி கற்றுக்கொடுப்பதுபோல் யோகாவும் ஒன்றாகும்" என கூறியிருக்கிறார். உலகமே ஒத்துக்கொள்ளும் ஒரு இந்துத்துவ அரசாங்கம் யோகாவை கோடிக்கணக்கில் செலவுசெய்து இவ்வளவாய் முன்னுக்குத் தள்ளுகிறார்கள் என்றால் அதில் ஒரு காரணம் இல்லாமல் இருக்க முடியாது. ஆதாயம் இல்லாமல் யாரும் ஆற்றோடு போகமாட்டார் என்பார்கள் இல்லையா. மக்கள் ஆரோக்கியத்தில் அவ்வளவு அக்கறை என்றால் மதுவையும் புகையையும் ஒழிக்க வேண்டியது தானே அதை விட்டு விட்டு யோகா மேல் அக்கறையென்ன? உடற்பயிற்சி என ஒப்புக்கு சொல்லி ஆரம்பித்து கடைசியில் மொத்த‌ உடலையும் பிசாசுக்கு ஒப்படைப்பது தான் சாத்தானின் தந்திரம்.இதை ஐயா அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் போய்விடுங்கள் என‌ சில காவி மந்திரிகள் சினம் கொள்வதேன்?.இப்போது யோகா தின ஆர்ப்பாட்டங்கள் முடிந்து போன பின்னாலும் திரை மறைவாக யோகாவை உலகளாவில் பிரபல படுத்த பல்வேறு முயற்சிகள் இந்த அரசாங்கம் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. இதில் பெயர் கிறிஸ்தவர்கள் எளிதாய் விழுந்துபோகிறார்கள். "மற்ற மத தெய்வங்கள் என்பவைகளின் பெயர்களை நாம் யோகா பயிற்சியில் நினைக்கவேண்டுமா?. அப்படி யாரையும் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு பிரியமானால் இயேசுகிறிஸ்துவை நினைக்கலாமே" என கூறியிருக்கிறார் ஐயா அவர்கள். அப்படி பார்க்கப்போனால் அன்றைக்கு தானியேல் கூட சிலையின் முன்பாக பணிந்து கொண்டு அதே வேளையில் மனதில் தேவனை நினைத்திருக்கலாமோ என தோன்றுகிறது. "ஆகவே நான் என்ன கூறவிரும்புகிறேன் என்றால், கிறிஸ்தவர்கள் யோகாவைப்பற்றி பயம் கொள்ளவேண்டாம். அதைவிட உடற்பயிற்சி செய்யலாம் அது மிகவும் நல்லது" என கூறிமுடித்திருக்கிறார். உடற்பயிற்சி நல்லது தான். ஆனால் அது யோகா வழியாய் தேவையில்லை என ஆணித்தரமாக டாக்டர் புஷ்பராஜ் ஐயா அவர்கள் கூறியிருக்க வேண்டும். பயம் வேண்டும் ஐயா யோகாவைப் பற்றிய‌ பயம் வேண்டும். கர்த்தருக்குப் பயப்படும் பயம் வரும் போது யோகா மீது பயமும் வரும் வெறுப்பும் வரும்.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment