Tuesday, August 25, 2015

வேதாகமத்தில் தத்மோர் (Tadmur) என அழைக்க‌ப்படும் நகரம் தான் இப்போது பால்மைரா ( Palmyra) என அழைக்கப்படுகிறது. இது சிரிய பாலைவனத்திலுள்ளது. சாலமோன் ராஜா இந்நகரத்தை இப்பாலைவனத்தில் கட்டியதாக வேதாகமத்தில் 2நாளாகமம்:8:4 ல் படிக்கிறோம். வேதாகமம் சொல்லுகிறது. சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான். அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான். (II நாளாகமம் 8 3,4) என்று.இப்படி ஒரு மிகப்பழமைவாய்ந்த நகரம் தான் பால்மைரா. இங்குதான் ஒன்றையும் ஆக்கத்தெரியாதவர்கள் அழித்துத்தள்ளியிருக்கிறார்கள். கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை. வேதம் சொல்லுகிறது விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான், மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான் (நீதிமொழிகள் 13:16).


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment