Tuesday, February 07, 2012

மாணிக்க திருமொழிகள் 1

எவனொருவன் வெயிலையும் மழையையும் சமமாகப் பாவிக்கிறானோ அவனுக்கு டபுள் நிமோனியா கிட்டும்.இது உலகம்.
எவனொருவன் சுகத்தையும் துக்கத்தையும் சமமாய் பாவிக்கிறானோ அவனுக்குப் பேரின்பம் கிட்டும். இது வேதாந்தம்.

மனுக்குலம் முழுமையும் பொறுத்த முச்சத்துருக்கள்- பிசாசு,மாம்சம்,உலகம்.
தெய்வ மக்களைப் பொறுத்த முச்சத்துருக்கள்-சோதனை,கவலை,பயம்

அடே அப்பா! மனிதனுக்குத்தான் எவ்வளவு பைத்தியம்.
அவனால் ஒரு புழுவை உண்டாக்க முடியவில்லை; ஆனால் கணக்கில்லாத கடவுள்களை மட்டும் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறான்.

பகலில் தீவெட்டி கொழுத்துகிறவன் இரவில் எண்ணெய் இல்லாமல் திண்டாடுவான்.இளமையில் பணம் சேர்க்காமல் செலவு செய்பவன், முதுமையில் வாழ வழியற்று வாடுவான்.

குருடர் கண்களில் சூரிய வெளிச்சம் படும்போது கூச்சம் உண்டாகாது;இதயக் கடினமுள்ளவர்களுக்கு சுவிசேஷ வெளிச்சம் படும்போது அது அவர்களைப் பிரகாசிப்பிக்காது.

சவுல் என்ற பவுல் 25 வயதில் குணப்படாமல் 70 வயதில்குணப்பட்டிருப்பாரானாம் என்னவாகி இருக்கும்?சரித்திரத்தில் பவுல் என்ற பெயரே வந்திருக்காது.

கடவுள் ஒவ்வொரு பட்சிக்கும் ஆகாரத்தைக் கொடுக்கிறார்.
ஆனால் பட்சிகளின் வாயில் கொண்டுபோய் ஆகாரத்தைத் திணிக்கிறதில்லையே!

மெழுகுவர்த்தி மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கத் தன்னைச் செலவழிக்கிறது
.
முட்டாள்களின் நடுவில் ஒரு புத்திசாலியிருப்பது குருடர்களின் நடுவே ஒரு அழகிய யுவதி இருப்பதுபோல.

காலத்தை ஆதாயப்படுத்துங்கள்.
நயா பைசாக்களை சரியானபடி நன்மைக்கேதுவாக உபயோகிக்கும் போது, நாம் ரூபாய்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ரூபாய் தன்னையே காத்துக்கொள்ளும்.
அவ்வாறே, ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாய்க் கழிக்காமல் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமானால் நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் தங்களையே காத்துக்கொள்ளும்.
காலம் பணத்துக்குச் சமம்.

கேட்பதைவிட பேசுவதே லாபம் என்ற நிலைமை ஏற்படும் போது உன் நண்பனை மாற்றிக்கொள்.

விடாமுயற்சியை சிறையிலடைத்ததால் “மோட்ச பிரயாணம்” என்னும் புத்தகம் தோன்றியது.(ஜாண் பனியன்)
விடாமுயற்சியின் கண்ணை குருடாக்கினதால் “பரதீசு இழத்தல்” என்னும் நூல் வெளிவந்தது.(ஜாண் மில்ற்றன்)
விடாமுயற்சியின் காதை செவிடாக்கினதால் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டது.(தாமஸ் எடிசன்)

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment