இங்கிலாந்து தேசத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஆல்பர்ட் ஹென்றி ராஸ் (Albert Henry Ross,1881-1950). இவர் பிராங்க் மாரிசன் (Frank Morison) என்கின்ற புனைபெயரில் ஆங்கிலத்தில் எழுதிய பல புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை. கிறிஸ்தவ மதம் என்றாலே எட்டிக்காய் போல வெறுப்பவர். இவர் இயேசுவின் உயிர்தெழுதலே சம்பவிக்கவில்லையென்று ஒரு நூல் எழுதினால் பல கிறிஸ்தவர்களை கிறிஸ்துவை விட்டு பிரித்து விடலாம் என்று திட்டமிட்டார். இதற்கான புத்தகத்தை எழுதுவதற்காக வேதாகமத்தை இரவும் பகலுமாக வாசிக்க ஆரம்பித்தார். புத்தகத்தின் சில பக்கங்களை எழுதவும் துவங்கி விட்டார். இவர் கிறிஸ்துவுக்கு விரோதமாக புத்தகம் எழுதுவதை கேள்விப்பட்ட சில உண்மையான கிறிஸ்தவர்கள் இவருக்காக ஜெபித்தார்கள். இந்நிலையில் வேதம் இவர் மனதில் கிரியை செய்யத் துவங்கியது. முதல் அத்தியாயம் எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே கிறிஸ்துவின் விசுவாசியாக மாறினார். கடைசியில் இயேசு மெய்யாகவே உயிர்த்தெழுந்தார் என்று பலமான சாட்சிகளுடன் தன் புத்தகத்தை எழுதி முடித்தார். அவர் எழுதிய நூலின் பெயர் Who moved the stone? 1930ம் ஆண்டில் முதலில் வெளியான இப்புத்தகம் பிற்பாடு 1944, 1955, 1958, 1962, 1977, 1981, 1983, 1987, 1996 மற்றும் 2006 ஆண்டுகளில் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படி இந்த புத்தகம் இலட்சக்கணக்காக விற்பனையாயின. ஆங்கிலத்தில் இயேசுவைப் பற்றிச் சொல்லும் புத்தகங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் புத்தகம்.
சங்கீதம் 145:18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
0 comments:
Post a Comment