Friday, July 13, 2012

ஆச்சரியமாய் உயிர்பெற்ற எபிரேய மொழி

உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, மூல மொழிகளாக திகழும் செம்மொழியாகும் தகுதியை கீழ்கண்ட ஆறு மொழிகளே பெற்றிருக்கின்றன.


1.கிரேக்கமொழி
2.இலத்தின்மொழி
3.சீனமொழி
4.எபிரேயமொழி
5.சமஸ்கிருத மொழி
6.தமிழ்மொழி

இவற்றில் கிரேக்கமொழி, இலத்தின்மொழி,  சமஸ்கிருதமொழி ஆகிய மூன்றும் இறந்து போன மொழிகளாகும். எபிரேயம் - கி பி 2ம் நூற்றாண்டில் இஸ்ரேல் ஜனங்களான யூதர்கள் உலகமெங்கும் சிதறடிக்கப் பட்டபோது வழக்கற்று ஒழிந்த மொழியாய் போனது. அப்படியே அந்த மொழி காணாமல் போயிருக்க வேண்டும்.பொதுவாக நமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து பிற நாடுகள் சென்ற அனேகர் தம் தாய் மொழியை சீக்கிரமாகவே மறந்து விடுகின்றனர் என்பது மிக உண்மை.அமெரிக்காவில் வாழும்,அங்கு பிறந்த இந்திய வம்சா வழி குழந்தைகளிடம் அவர்கள் தாய்மொழியை சுத்தமாக எதிர்பார்க்க முடியாது.
ஆனால் இஸ்ரேல் ஜனங்கள் ஆயிரம் ஆண்டுகளாக பிற நாடுகளில் சிதறடிக்கப்பட்டிருந்தும்,பல நூறு ஆண்டுகள்  எபிரேயமொழி பேசப்படாமலே எழுதப்படாமலே இருந்தும், இம்மொழி மீண்டும் வந்து பைபிள் முன்னறிவிப்பு படி இன்று லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யம். கி பி 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த எலியேசர் பென் யெஃகுடா (Eliezer Ben-Yehuda) என்ற மொழியியல் அறிஞர் எபிரேயு மொழியை மீண்டும் உயிர்பெற வைத்தார். இது இன்றைய இஸ்ரேலின் ஆட்சி மொழியாக வாழ்கிறது. 7 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பேசப்படுகிறது. பரிசுத்த வேதம் முழுக்க முழுக்க உண்மை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

செப்பனியா 3:9. அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்.

1 comment:

  1. Pls Upload Thedivantha Theivam Yesu song sung by Prophet Vincent Selvakumar

    ReplyDelete