Thursday, July 19, 2012

இயேசு இந்தியா வந்தாரா? - குறும்பதில்கள்

கேள்வி: இயேசு தன்னுடைய கடைசி காலத்தில் இந்தியாவிற்கு வந்ததாகவும் சிலுவையில் அறையப்பட்டவர் அவர் அல்லவென்றும், இயேசுவின் கல்லறை காஷ்மீரி›ல் இருக்கிறதென்றும் சிலர் சொல்கிறார்களே? அதுபற்றி உங்கள் விளக்கம் என்ன?

பதில்: இப்படியொரு கருத்து பல காலமாக சொல்லப்பட்டு வருவது உண்மை தான். இயேசு இந்தியாவிற்கு வந்தார். காஷ்மீரி›ல் போய் சமாதியாகி விட்டார் என்று சொல்பவர்கள் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கொள்வது பர்னபாவின் சுவிசேஷம் என்ற நூலைத்தான் (Gospel of Barnabas). இந்த பர்னபாவின் சுவிசேஷம் இயேசுவின் மரணம் பற்றி என்ன சொல்கிறது? ரோமவீரர்கள் இயேசுவைக்கைது செய்ய அனுப்பப்பட்டபோது கர்த்தர் குறுக்கிட்டு தேவ தூதர்களை அனுப்பி இயேசுவைத் தூக்கிக் கொண்டு வரச் சொல்லிவிடுகிறார். இயேசுவைக் கைது செய்ய வந்த வீரர்கள் இயேசுவை உருவத்தில் ஒத்திருந்த யூதாஸை இயேசு என்று கருதி கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். யூதாஸ், தான் அவனி›ல்லை என்று எத்தனையோ மன்றாடியும் பாவம் அவனை சிலுவையிலறைந்து விடுகிறார்கள். நீர் அழைத்தீர் என்பதினாலே தானே ஊழியத்திற்கே வந்தேன். கடைசியில் இப்படி ஏன் கைவிட்டீர்' என்று கதறியதாக சொல்லப்பட்டுள்ளது. (பாவம் யூதாஸ்).சரி. தேவதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்ட இயேசு என்னவானாராம்? அவரை அவர்கள் பரலோகத்திற்கு கொண்டு செல்லாமல் எருசலே•முக்கு வெளியிலிருந்த வனாந்திரம் ஒன்றில் இறக்கிவிட்டு சென்றுவிட்டார்களாம். தனக்கு விதிக்கப்பட்ட சிலுவை தண்டனை யூதாஸிடத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டதை அறிந்து கொண்ட இயேசு இரகசியமாக அவருடைய தாயாரையும், சீடர்களையும் காண வந்தாராம். அதைத்தான் அவர்கள் இயேசு உயிர்த்தெழுந்துவிட்டதாக சொன்னார்களாம். தொடர்ந்து தான் எருசலேமில் தங்க •முடியாது என்ற மு•டிவுக்கு வந்த இயேசு அங்குமிங்கும் சுற்றித்தி›ரிந்து கடைசியில் காஷ்மீருக்கு வந்து சேர்ந்துவிட்டாராம். அங்கே அந்த நாட்களில் தீவிரவாதிகள் இல்லாததினால் அங்கேயே தொடர்ந்து தங்கிவிட்டு ஒரு கல்யாணத்தையும் பண்ணிக்கொண்டு குடும்பமாய் வாழ்ந்துவிட்டு கடைசியில் காஷ்மீ›ரிலேயே மரி›த்தும் போய்விட்டாராம் என்று அள்ள அளவில்லாமல் கற்பனைகளை அள்ளித்தெளித்திருக்கிறது அந்த பர்னபாவின் சுவிசேஷத்தில்.

இதையொட்டி எழுதப்பட்ட புத்தகங்களுள் பேபர் கெய்சர் (Faber Kaiser) என்பவர் 1977ல் வெளியிட்ட "Jesus Christ Died in Kashmir' என்ற புத்தகத்தில் ""இயேசு உண்மையில் ம›ரிக்கவில்லை. அவர் கோமா நிலையிலிருந்தார். அவர் ம›ரித்துவிட்டார் என்று தவறாக கருதி அவரை கல்லறையில் வைத்து விட்டார்கள். இரண்டுநாள் மயக்கநிலையிலிருந்து விட்டு பின்னர் விழிப்புத்தட்ட, இயேசு எழுந்து பார்த்துவிட்டு கல்லறையின் கல்லை தாமாகவே புரட்டி வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி காஷ்மீருக்கு வந்துவிட்டார். அவர் கல்லறை இன்னமு•ம் அங்கே இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியா கல்லறையை காட்டுங்கள் என்று கேட்டால் மலைகளுக்கிடையில் இருக்கும் ஒரு நீண்ட கல்லறையை காட்டுகிறார். கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாம் என்றால் தொந்தரவு பண்ணாதீர்கள் இயேசு தூங்கட்டும் என்கிறார். இவர்தவிர, பஞ்சாபில் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (Mirza Ghulam Ahmad) என்கிற இஸ்லாமிய அறிஞர் இயேசு இந்தியாவிற்கு வந்தார் என்று சொல்லுகிறார். விளக்கம் கேட்டால் மத்திய பஞ்சாபில் இயங்கிவந்த பழைய ஊழிய நிறுவனம் ஒன்றை காட்டுகிறார். விளக்கம் பு›ரியாமல் நீங்கள் அவரைப் பார்த்தீர்களேயானால் உடனே ஆமாம் தம்பி... இயேசு இந்தியா வந்திருந்தபோது அவர் தான் இதை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருந்தார் என்பார். சரி›, இவைகளுக்கான விளக்கம்தான் என்ன? பர்னபா ஏன் அப்படியொரு சுவிசேஷம் எழுதினார்? காஷ்மீரி›ல் இவர்கள் காட்டும் கல்லறை யாருடையது? என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் பதில் பார்ப்போம்.

மு•தலில் பர்னபாவின் சுவிசேஷம். இது நீங்கள் நினைக்கிற மாதி›ரி பவுலுடன் ஊழியம் செய்த பர்னபா எழுதியதல்ல. வேறுயாரோ ஒரு டுபாக்கூர் பர்னபா. இது எழுதப்பட்ட காலம் கி.பி. 1349ல். அதாவது இயேசுவின் மரணத்திற்கு பின்பாக ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு பிறகு. அப்படியானால் இது வேதத்தில் காட்டப்படும் பர்னபாவினுடையது அல்ல. எனவே இது நம்பகமானது அல்ல. இயேசுவின் பிறப்பு, வளர்ப்பு மரணம் பற்றி அவருடனே இருந்தவர்கள் அல்லது அவர்காலத்தில் வாழ்ந்தவர்களின் சாட்சிகளைத்தான் நம்பகமானதாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இயேசுவைப் பற்றி அவருடனே வாழ்ந்த அல்லது அவர்காலத்திலேயே வாழ்ந்த மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் போன்றவர்கள் எழுதிவைத்த சுவிசேஷங்கள் தான் நம்பகமானவை. காரணம், இவையாவும் மு•தல் நூற்றாண்டிலேயே அதாவது இயேசுவின் நினைவுகள் எல்லார் மனதிலும் பசுமையாக இருக்கும்போதே எழுதப்பட்டவை. மாத்திரமல்ல, இவைகளில் காணப்படும் நிகழ்ச்சிகளுக்கும், இயேசுவின் சிலுவை மரணத்திற்கும் ரோம சாம்ராஜ்யத்தின் ஆவணங்கள் மற்றும் குறிப்பேடுகளில் அக்காலத்தில் ஆண்ட ஆளுநர்களின் கையெழுத்துடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பர்னபாவின் சுவிசேஷம் எழுதின பர்னபா யார் என்பதற்கே ஆதாரங்கள் இல்லை. இரண்டாவது மிர்சா குலாம் அகமதுவின் கூற்று பற்றியது. இந்த மீர்சா குலாம் துவக்கத்தில் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்து கடைசியில் தன்னை இறுதிக்கால நபி என்று பிரகடனம் செய்து கொண்டார். பைபிள் மாத்திரமல்ல. குர் ஆனைப்பற்றியும் நிறைய தாறுமாறான கருத்துக்களை சொல்லியுள்ளார். இவரை இதனால் ஒரு கூட்டம் ஜனங்கள் தவிர யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்பற்றியவர்கள் அகமதியர்கள் (Ahmadiyya) எனப்பட்டனர். எனவே, இவரது சாட்சியும் நம்பகமானதல்ல. கெய்ச›ன் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல இயேசு சரி›யாக மரி›க்கவில்லை. கோமாவில் கிடந்தார் என்பதெல்லாம் கடைந்தெடுத்த கற்பனை ரகங்கள். ரோம வீரர்கள் சிலுவை தண்டனை நிறைவேற்றுவதில் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். ஒரு நாளைக்கு இது மாதிரி› பலபேரை சிலுவையில் அறைந்து கொல்லும் புரபஷனல் கொலைகாரர்கள். அவர்கள் இயேசு மரி›த்ததை உறுதி செய்யத்தான் அவர் விலாவிலே குத்தினார்கள். சரி›யாக மரி›க்கவில்லையென்றால் உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். அதுவும் தவிர இயேசு கல்லறையில் வைக்கப்பட்ட போது இயேசுவின் சரீŸரத்தை அவர் சீடர்கள் ஒளித்து வைத்துவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லிடுவார்கள் என்று மனுச்செய்துதான் யூதர்கள் அவர்கள் கல்லறையை காவல் செய்ய உத்தரவு பெற்றனர். அதன்படி ரோம அரசாங்கம் அவர் கல்லறையை காவல் செய்ய வீரர்களை நியமித்திருந்தது. இயேசு கோமா தெளிந்து எழுந்து தன்னிஷ்டப்படியெல்லாம் இந்த வீரர்களை தாண்டி வெளியே போய்விட மு•டியாது. அதுவும் தவிர, கோமாவில் கிடந்த ஒரு மனிதர் எழுந்தவுடன் அவர் நடக்க •முடியாது. அப்படியே நடக்கவேண்டுமானாலும் நாலைந்து பே›ரின் உதவியுடன் தான் செய்ய மு•டியும். இங்கே கெய்சர் புத்தகத்தில் சிலுவையிலறையப்பட்டு கோமாவில் கிடந்த இயேசு எழுந்து பார்த்து கல்லைத் தாமே புரட்டிப்போட்டு விட்டு (கல்லறைக்கல் என்பது பெ›ரிய பாறை) ஹாயாக நடந்து போயிருப்பது தமிழ் சினிமாக்களில் கூட பார்க்க• முடியாத கற்பனை ரகம். ச›ரி. இவர் காட்டும் காஷ்மீர் கல்லறை பின்னே யாருடையது? •முதலாம் நூற்றாண்டில் கிரேக்க, ரோமானிய உலகில் பெரும்புகழ் பெற்றிருந்தவர் அபோலநிபஸ் என்பவர். இவர் நம்‰மூர் சித்தர்கள் மாதிரி› பல அமானுஷ்ய செயல்களை நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது. பின்வந்த, நூற்றாண்டுகளில் ஏகப்பட்ட கால இடைவெளியில் மக்கள் இயேசுவையும் அகோ லிநிபஸையும் ஒன்று என்று ஜனங்கள் கருதியிருக்கலாம். எனவே காஷ்மீரி›ல் கெய்சர் காட்டுவது இயேசுவின் கல்லறையல்ல. மாத்திரமல்ல. இயேசுவுக்கு எங்குமே கல்லறை இல்லை. அவர் மரி›த்தபோது அவரை வைத்திருந்த இடம் தான் இருக்கிறது. கல்லறை என்றால் அதனுள்ளே ம›ரித்தவர் இருக்கவேண்டும். இயேசு உயிர்த்ததினால் அவர் அங்கே இல்லை. பின்னர் இதுமாதிரி› கதைகள் ஏன் கிளப்பிவிடப்படுகின்றன? இயேசுவின் மரணத்தை ஒத்துக் கொள்ள •முடியாத சிலர் அவர் மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கை காரணமாகத்தான் இறைவன் மனிதனாக அவதரி›த்து இவ்வளவு மோசமான மரணத்தை அடைந்திருக்க மு•டியாது என்று கருதி இதுபோல கற்பனை செய்துகொண்டு புத்தக•ம் எழுதிவிடுகிறார்கள்.(இயேசுவின் தொனி மார்ச் 08)

 அப்போஸ்தலனாகிய யோவானை தவிர , மற்ற 12 அப்போஸ்தலர்களும், பவுல், மற்றும் யூதாசுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியாஸ் உட்பட அனைவருமே இரத்த சாட்சிகளாக கொலை செய்யப்பட்டு கிறிஸ்துவுக்காக மரித்தார்கள். ஒரு பொய்க்காக ஏன் இவர்கள் அனைவரும் தங்கள் உயிரை அப்படி மாய்த்திருக்க வேண்டும்? சிந்தித்துப் பாருங்கள். உண்மையில், எந்த புத்தகமும் இந்த அளவு ஆழமாய் ஆராயப்பட்டதில்லை. இந்த 2000 ஆண்டுகளில் பைபிளில் குறைகண்டு அதை எப்படியாவது அழிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஏராளம்.ஆனால் வேதாகமமோ இன்னமும் இருக்கின்றது. அநேகருடைய வாழ்க்கையை இன்னும் மாற்றிய படி இருக்கின்றது. இயேசு கிறிஸ்துவை பற்றிய நற்செய்தியை உலகுக்கு பறைசாற்றியபடி உள்ளது. 

ஏசாயா:40:8. புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்

1 comment:

  1. இக்கட்டுரைகளுக்கு தொடர்புடைய இரு கட்டுரைத் தொடுப்புக்களைத் தந்துள்ளேன். படிப்வருக்கு உதவும் என விசுவசிக்கிறேன்

    காஷ்மீரில் இயேசுவின் கல்லறை உள்ளதா?
    (இயேசுக்கிறிஸ்துவைக் குறித்து பலவிதமான கருத்துக்கள் பிறஇன, மத மக்களிடையே நிலவுகின்றன. அவற்றுக்கு ஆதாரபூர்வமான பதில்களை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். இக்கட்டுரையான காஷ்மீரில இயேசுவின் கல்லறை உள்ளதா? அகமதியா இயக்கதினர் கூறுவது உண்மைதானா என்பதை தர்க்க ரீதியிலும் வரலாற்று ரீதியிலும் ஆராய்கிறது)

    http://paralogapathi.blogspot.com/2010/12/blog-post.html

    இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா?
    Did Jesus rise from the dead or did he recover from a state of unconsciousness?

    http://paralogapathi.blogspot.com/2011/08/blog-post_17.html

    ReplyDelete