Wednesday, September 28, 2016

மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் #சேவை என்பதையே "மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்ற கிறிஸ்துவின் வாக்கியம் (மத் 25:40) பிரதிபலிக்கிறது. கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்றது #திருக்குறள். மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்த அக்காலங்களில் #கல்விப்பணி என்பது கண்ணில்லாதவர்களுக்கு கண்களை அளிப்பது போன்றிருந்தது. அப்படியே கல்விக் கண்கள் திறந்ததால் இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் (மத் 4:15). கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு என்றுமே #தமிழகம் நன்றிகடன் பட்டிருக்கிறது.


0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment