உலக சமுத்திரங்களிலேயே மிக ஆழமான பகுதி எதுவென்று தெரியுமா? ஜப்பானுக்கு அருகே பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானாஸ் டிரெஞ்ச் என்பது தான் அது.இதன் ஆழம் 35,827 அடிகள். அதாவது இந்த ஆழத்தில் எவரெஸ்ட் சிகரத்தையே அலாக்காக தூக்கி போட்டு விடலாமாம். ஏனென்றால் எவரெஸ்டின் உயரம் வெறும் 29,035 அடிகள் மட்டுமே. உலகமகா சிகரத்தையே விழுங்கிக் கொண்டு அதற்கான அடையாளமே இல்லாமல் அமைதியாக கிடக்கும் இந்த மரியானாஸ் ஆழம்.
அன்பரே! உங்கள் பாவங்கள் எவெரெஸ்ட் மலையத்தனையாய் குவிந்திருக்கிறதே என வருந்துகிறீர்களா? வேதாகமம் மீகா:7:19 ல் சொல்லுகிறது கடவுள் "நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" என்று. உங்கள் பாவங்களும் அக்கிரமங்களும் எவெரஸ்ட் சிகரம் போல் குவிந்திருந்தாலும் அதை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு காணாமல் போகச்செய்ய கர்த்தர் ஒருவரால் மட்டுமே முடியும். அவரண்டை அண்டிக்கொள்வாயா? அவர் அருளும் சமாதானத்தை பெற்றுக்கொள்வாயா?
visit www.calvarytabernacle.in for deep tamil christian messages
ReplyDelete