Saturday, July 20, 2013

நிச்சயமாக பதில் உண்டு


அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான்.

ஆகார் அழுதாள் - தண்ணீர் துரவைக் கண்டாள்.

எசேக்கியா அழுதான் - ஆயுளில் 15 ஆண்டுகள் கூட கிடைத்தது.

நெகேமியா அழுதான் - எருசலேமின் அலங்கம் கட்டப்பட்டது.

எஸ்தர் அழுதாள் - யூதருக்கு அழிவிலிருந்து விடுதலை கிடைத்தது.

பாபிலோனிலிருந்த யூதர்கள் அழுதார்கள் - விடுதலை பெற்று ஒரு ஜாதியாய் நிலைநாட்டப் பட்டார்கள்.

மகதலேனா மரியாள் அழுதாள் - உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவதாக‌ தரிசித்தாள்.

நீ ஏதற்காக‌ அழுகிறாய் ??
நிச்சயமாக பதில் உண்டு


உன் நம்பிக்கை வீண்போகாது!

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18


தேவன் தெரிந்துகொண்ட...

யாக்கோபு ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான்
பேதுருவுக்கு சட்டென‌ கோபம்வ‌ரும்
தாவீது பிறன் மனை நோக்கினான்
நோவா குடித்து வெறித்திருந்தான்
யோனா தேவ‌னை விட்டு விலகி ஓடினான்
ப‌வுல் கொலை செய்கிறவனாயிருந்தான்
மிரியாம் முறுமுறுத்தாள்
தோமா ஒரு ச‌ந்தேகப்பேர்வ‌ழி
சாராளுக்கு பொறுமை கிடையாது
மோசே திக்குவாயன்
ச‌கேயுவோ குள்ள‌ம்
ஆபிர‌காம் வ‌ய‌தான‌வனாயிருந்தான்

ஆனாலும் தேவ வார்த்தை சொல்வது என்ன தெரியுமா?

"என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்."
II கொரி:12:9

தமிழில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்



Church of the Pater Noster என்பது எருசலேம் நகரில் ஒலிவமலையின் மேல் அமைந்துள்ள ஓர் ஆலயம். இவ்விடத்தில் தான் இயேசு கிறிஸ்து தமது சீஷர்களுக்கு பரமண்டல ஜெபம் செய்ய கற்றுக்கொடுத்தார் என வேத ஆராய்சியாளர்கள் நம்புகிறார்கள் (மத்:6 9 13).இந்த ஆலயத்தின் சுவர்களில் உலகின் பல்வேறு மொழிகளில்  பரமண்டல ஜெபம் பொறிக்கப்பட்டுள்ளது.மேலே நீங்கள் படத்தில் காண்பது அங்கே நமது தாய்மொழியாம் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ள பரமண்டல ஜெபம்.
என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.சங் 5:2

Thursday, June 13, 2013

கர்த்தருடைய வேதம்


"அநேக ஆண்டுகளாக நான் ஆண்டுக்கு இரு முறை வேதாகமத்தை முழுமையாக படித்து வருகிறேன். அது ஒரு பிரமாண்டமான, வல்லமையுள்ள மரத்தைப் போன்றது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு பெரிய கிளையைப் போன்றது. கனிகளைப் பெறுவதற்காக ஒவ்வொரு முறையும் அந்தக் கிளையைப் பிடித்துக் குலுக்குகிறேன். ஆனால் எப்போதுமே நான் ஏமாற்றமடைந்தது கிடையாது." - ‍ மார்ட்டின் லூதர்.

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. சங்கீதம் 19:7 

Friday, May 24, 2013

காற்றின்வழி

என்ன‌வெல்லாமோ தொழில்நுட்ப‌ங்க‌ள் வ‌ந்திருக்கிற‌தென்று சொல்லுகிறார்க‌ள். ஆனால் இந்த‌ காற்று போகும் பாதையை முன்கூட்டியே க‌ண்ட‌றிந்து அங்கிருக்கும் ம‌க்க‌ளை வெளியேற்றுகிறார்க‌ளா பாருங்க‌ள்? இத‌ற்கிடையே "க‌ட‌வுள் துக‌ளை" க‌ண்டுபிடிக்க‌ப்போகிறார்க‌ளாம். வேதாக‌ம‌ம் என்ன‌ சொல்லுகிற‌து."காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது." (யோவான்:3:8)என்கிற‌து. மேலும் "காற்றின்வழி யாதென்று உனக்குத் தெரியாது...இதைப்போலவே, தேவன் என்ன செய்வார் என்பதும் உனக்குத் தெரியாது. அவர் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்" (பிர‌ச‌ங்கி:11:5) என்கிறது வேத‌ம்.காற்றின் வ‌ழிக‌ளை க‌ண்டுபிடிக்க‌ முடியாது தான் போலிருக்கிற‌து.