Monday, August 13, 2012

Pray for India

Pray for India Hindi Version

http://www.youtube.com/watch?v=TajA7a3Kvlo
Pray for India Tamil Version

http://www.youtube.com/watch?v=N5AZuOrhMa4

Saturday, August 11, 2012

நன்றி மறவாத சாதனைப் பெண் - மேரி கோம்

இதுவரை வரலாற்றில் இல்லாதவாறு இந்த முறை இந்தியா ஆறு பதக்கங்களை ஒலிம்பிக் போட்டிகளில் வாங்கி சாதனை படைத்துள்ளது. சாதனை வீரர்கள் அனைவருக்கும் நம் நல்வாழ்த்துகள். இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கையை முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையான மூன்றிலிருந்து நான்காக கூட்டி ஒரு புதிய மைல் கல்லை உருவாக்கியது பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் போட்டியிட்ட மேரி கோம் (Mary Kom) அவர்கள். மணிப்பூரை சேர்ந்த இந்த சாதனையாளரின் மிகப்பெரிய மீள்வரவு அனைவருக்கும் ஆச்சரியமானது. ஐந்து வயதான இரட்டையர்களின் தாய் இவர், பன்னிரண்டு வருட போராட்டத்துக்குப் பின் இந்த மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஒரு சாதனைப்பெண் மட்டுமல்லாது இறை தெய்வ பக்தியும் கொண்ட ஒரு பெண் என்பது பலருக்கும் தெரியாத விசயம். தான் அளிக்கும் எல்லா பேட்டிகளிலும் தைரியமாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தை குறிப்பிட தயங்கமாட்டார். இந்தியா டுடே பத்திரிகை அவரைப் பற்றி குறிப்பிடும் போது ”She believes firmly in Jesus Christ and has no hesitation in invoking Him before any bout” என்றது.

வெண்கலப் பதக்கத்தை வென்றுவிட்ட தன்னால் தங்கமோ,வெள்ளியோ வாங்க முடியாததற்காக இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்திய மக்களின் ஆதரவு தமக்கு ஆமோகமாக இருந்தது என பெருமையாக பேசிக்கொண்ட அவர் ”என்னால் முடிந்த அளவுக்கும் கடினமாக உழைத்தேன். இந்த பதக்கமாவது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே” என்றார். “இது ஒரு விளையாட்டு, சில சமயங்களில் எல்லாமே நாம் எதிர்பார்ப்பது போல அமையாது. ஆனாலும் இது மட்டாகிலும் வந்ததற்கு இயேசுவுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் நுழையவேண்டும் என்பது என் 12 வருட போராட்டம்.அந்த கனவு இப்போது நனவானதற்காக ரொம்ப சந்தோசம்” என மகிழ்ச்சி பொங்க கூறினார் அவர். ரேடியோ ஆஸ்திரேலியாவுக்கு அவர் ஒருமுறை அளித்த பேட்டியில் ”நான் குத்துச்சண்டை வளையத்தில்  நுழைந்ததும், ஆட ஆரம்பிக்கும் முன் முதல் ஐந்து அல்லது பத்து வினாடிகள் நான் நம்பும் என் இறைவன் இயேசுவிடம் பிரார்த்தனை செய்து விட்ட பின் தான் என் விளையாட்டை தொடங்குவேன்” என குறிப்பிட்டிருந்தார். இப்போது புரிகின்றதா அவர் வாழ்வின் வெற்றியின் இரகசியம்.
வாழ்த்துக்கள் ஒலிம்பிக் இந்தியா!

மத்தேயு 6:33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
நீதிமொழிகள் 21:31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
I கொரிந்தியர் 15:57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.

Wednesday, August 08, 2012

எருசலேம் - The Ultra-Holy City

யூத குல ஆச்சாரங்களை மிகச் சிரத்தையாக கடைபிடிக்கின்றன அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் பெருகியிருக்கின்ற படியால் அது ஒரு "புதிய எருசலேமாக" அல்ட்ரா-ஹோலி சிட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது என டைம் பத்திரிகை (13Aug2012) அச்சம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கின்றது? சேனைகளின் கர்த்தர் சொல்கிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(சகரியா:8:6) எருசலேம் முழுவதும் ஆரம்பக் கல்விக் கூடங்களின் 65 சதவீத பிள்ளைகள் இந்த யூதர்களின் பிள்ளைகள் தானாம். இப்படி இஸ்ரேலில் சமீபகாலமாக இந்த அல்ட்ரா ஆர்தோடாக்ஸ் யூதர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிவருகின்றது. இவர்கள் தோராவை படிப்பவர்கள். ரபி எனப்படும் போதகமார்கள் சொல்லும் பிரமாணங்களை வரி பிசகாமல் பின் பற்றுபவர்கள். அவர்கள் அணியும் கருப்பு ஆடை, தோற்றம், முடி அமைப்பு எல்லாமே ஒரு சீருடை போலவே இருக்கும். எருசலேமை மொய்த்திருக்கும் இவர்களை பற்றி வேதம் தீர்க்கதரிசனமாக முன்பே கூறியிருக்கின்றது. இவர்களின் ஆதிக்கம் வேதாகமத்தை நிரூபிப்பதோடு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் சமீபித்திருக்கிறது என கூறுகின்றது.

சகரியா 8:4-8
திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள்.நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும். இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Saturday, August 04, 2012

இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது

அமெரிக்காவின் Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் இப்போது செய்தித்தாள்களில் மிக பிரபலம். இந்த ரெஸ்டாரண்டுகளை பற்றி முன்பு கேள்விபட்டிராதவர்கள் கூட இப்போது அதிகம் அதிகமாய் கேள்விபடுகிறார்கள். சிலர் போற்றுகிறார்கள். பலர் தூற்றுகிறார்கள். நடப்பது தான் என்ன?
இந்த நிறுவனத்தின் CEO-வான டேன் கேத்தி (Dan Cathy) சொன்ன ஒரு கருத்து தான் இன்று அமெரிக்காவில் பிரளயமாகியிருக்கிறது. அப்படி அவர் என்னத்தான் சொல்லிவிட்டார்.

“குடும்பம் எனும் அமைப்புக்கு தான் எங்கள் முழு ஆதரவும். அது பைபிள் அடிப்படையிலான குடும்பம். எங்கள் நிறுவனம் கூட ஒரு குடும்ப நிறுவனம் தான், ஒரு குடும்பம் தலைமை ஏற்று நடத்தும் நிறுவனம். முதல் மனைவிகளோடேயே நாங்கள் இன்னும் வாழ்கின்றோம். அதனால் கடவுளுக்கு நன்றி. இந்த கருத்து எல்லாருக்கும் பிடிக்காது என்று தெரியும் ஆனாலும் கடவுளுக்கு நன்றி, ஏனென்றால் இந்த தேசத்தில் தான் நாம் நம் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டு விவிலிய கோட்பாடுகள் படி வாழ முடிகின்றது” என்றார். அவ்வளவுதான்.Source

இதுதான் இன்று சர்ச்சையாகியிருக்கின்றது.மேல் சொன்ன டேன் கேத்தியின் கருத்து ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்து கொள்ளும் கூட்டத்தின் அடி மனதை தொட்டதால் இன்று இந்த பிரளயம். கொடியேந்தி இந்த ரெஸ்டாரண்டை மொத்தமாக புறக்கணிப்போம் என கிளம்பியிருக்கின்றார்கள். நேற்று அவர்கள் ஒன்று கூடி Chick-fil-A ரெஸ்டாரண்டுகள் முன் குழுமி ஆணும் ஆணும் , பெண்ணும் பெண்ணும் உதடோடு உதடு முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துகொண்டார்கள். அமெரிக்காவின் பாஸ்டன் நகர மேயர் கூட எங்கள் நகருக்குள் Chick-fil-A ரெஸ்டாரண்ட் வர அனுமதிக்க மாட்டோம் என பிரகடனம் செய்துள்ளார். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்.(சங்கீதம் 2:4)

சிக்-பில்-ஏ நிறுவனம் ஆரம்பித்த காலத்திலிருந்தே அதன் நிறுவனர் ட்ரூயெட் கேத்தி (Truett Cathy) இதை விவிலிய கோட்பாடுகளின் படி நடத்துவதில் மிக ஆர்வம் கொண்டவராய் இருந்தார். எடுத்துக்காட்டாக ஞாயிற்று கிழமைகளில் ரெஸ்டாரண்டுகளை திறக்காமல் இருத்தல் அதனால் குடும்பங்கள் சர்சுக்கு ஒழுங்காக செல்ல முடியும், கடன் வாங்காமல் நிறுவனத்தை நடத்துதல், வருமானத்தில் ஒரு பகுதியை சமூகநலனுக்கு அளித்தல் போன்றன. இதனால் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இன்று அபரிதம். 1600 க்கும் அதிகமான ரெஸ்டாரண்டுகள் அமெரிக்காவெங்கும். வாரந்தோறும் புதிதுபுதிதாக திறக்கப்பட்டு வருகின்றன. கர்த்தர் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் ஆசீர்வதிப்பது ஒன்றும் ஆச்சரியமல்லவே.(மல்கியா 3:10)

ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் மணம் செய்யலாம் என உன் கருத்தை நீ சொல்ல உனக்கு அதிகாரம் இருக்கும் போது, என் கருத்தை நான் சொல்ல எனக்கு அதிகாரமில்லையா? நல்ல கதையாக இருக்கிறது.

சங்கீதம் 5:12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்வீர்.

Wednesday, August 01, 2012

தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்

இந்த கடைசி காலத்தில் தமிழ் திரைப்பட உலகின் மத்தியிலும் கர்த்தர் பெரிதான காரியங்களை செய்துவருகிறார். கர்த்தருக்கே மகிமை. கிறிஸ்துவின் வல்லமையை தமிழ் திரைஉலகினர் ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டு அனைவரும் அவர் அன்பிற்குள் வர நாமெல்லாரும் ஜெபிக்க வேண்டும். ஒருவரையும் புறம்பே தள்ளுகிற தேவன் நம் தேவன் அல்லவே.

http://www.youtube.com/watch?v=o7wS85Fp_to
http://www.youtube.com/watch?v=VODfw5RB1lA
http://www.youtube.com/watch?v=oPJtfu9U_1I
மத்தேயு 20:15 என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா.
யோவான் 6:37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.