Wednesday, February 22, 2006

பிரசவ வேதனை

மனித இனத்துக்கு மட்டுமே பிரசவவேதனை இத்தனை அதிகம் என "விகடன்,ஹாய் மதனில்" மதன் குறிப்பிடுகிறார்.பைபிளை புரட்டிய போது இதற்கு விடைகிடைத்தது.உலக துவக்கத்தில் கடவுள் மனிதனை படைத்த காலத்தில் ஏவாள் தடை செய்யப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்டு பாவம் செய்தபடியால் கடவுள் பெண்டிருக்கு கொடுத்த தீர்ப்பு-அந்த வேதனை என்கிறது பைபிள்.ஆச்சர்யம் தான்!!!!

-------------------------------------------------------------------------------------
ச.ஆ.கேசவன், இனாம் மணியாச்சி.
முட்டையிடும் பிராணிகள் பிரசவ வேதனையில் இருந்து தப்பிவிட்டது பற்றி..?
முட்டையென்ன, குட்டி போடும் பிராணிகளுக்கும் பிரசவ வேதனை கிடையாது! பிரசவத்தின்போது ஏதோ வித்தியாசமாக உணருமே தவிர, மாடு, ஆடு, நாய்... ஏதாவது குட்டி போடும்போது, ‘அலறி’ப் பார்த்திருக் கிறீர்களா? மனித இனத்துக்கு மட்டுமே பிரசவ வேதனை உண்டு. காரணம், இந்தப் பாழாய்ப் போன தலை! மூளை வளர வளர, மண்டையும் பெரிசாகிவிட்டது. பெண்ணின் ‘பிரசவ வாயில்’ எதிர்பாராத, திடீர் பரிணாமப் பிரச்னை!
-------------------------------------------------------------------------------------
நன்றி:விகடன் ஹாய் மதன் கேள்வி&பதில்

ஆதியாகமம்:3:16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.

Genesis 3:16 To the woman he said,
"I will greatly increase your pains in childbearing;
with pain you will give birth to children.
Your desire will be for your husband,
and he will rule over you."

2 comments:

  1. மதன் சொன்னது சரியா?
    பைபிள் சொல்வது சரியா?

    ReplyDelete
  2. அப்பாவி , இரண்டுமே சரி என்கிறேன் நான்.ஏதோ ஒரு காரணத்தினால் பிரசவ வேதனை மனித குலத்துக்கு மட்டும் தானே,பிற மிருகங்களுக்கு இல்லையே.

    நன்றி அப்பாவி.

    ReplyDelete