Tuesday, November 08, 2011

ஜாமக்காரன் அக்டோபர் 2011 பதிப்பு

(ஜாமக்காரனில்) எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள்.- 1 தெச 5:21.
ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான். ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்.- 1 கொரி 2:15


முன்னுரை
666 சீக்கிரம் வந்துவிடும் அபாயம்
வெளிநாட்டில் வாழும் (NRI) இந்தியர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தூய ஆவியின் ஞானஸ்நானம்
ஞானஸ்நானத்தின் (திருமுழுக்கின்) விளக்கம்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றி எடுத்துக்கூறும் வேத வசனங்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப்பற்றிய பலவித கருத்துக்கள்:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்பது ஒரு சரித்திர நிகழ்ச்சியாகும் என்பதற்கான ஆதாரங்கள்:
இன்று வாழும் விசுவாசிகளுக்கும், பரிசுத்தஆவியின் ஞானஸ்நானத்திற்கும் உள்ள தொடர்பு:
பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் இதன் பொருள்
ஞானஸ்நானத்தோடு சம்பந்தப்பட்ட வேறு சில வசனங்கள்:
ஆவியின் ஞானஸ்நானம், அக்கினி ஞானஸ்நானம் ஆகிய இவைகளுக்குள்ள வேறுபாடு:

அவசர ஜெபம்

கேள்வி - பதில்
கேள்வி: என் சொந்த கம்பெனியில் கூலி வேலை செய்யும் யாவருக்கும் நாங்கள் சுவிசேஷம் அறிவிக்கிறோம். அவர்களில் பலர் இரட்சிக்கப்பட்டு நாங்கள் ஆராதிக்கும் பெந்தேகோஸ்தே சபைக்குதான் அவர்களும் கலந்துக்கொள்கின்றனர். எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் கூலியாட்களில் ஒருவன் நல்ல மனந்திரும்பினவன், உண்மையுள்ளவன். ஆனால் இப்போ கொஞ்சகாலமாக வேலையில் அக்கறை காட்டுவதில்லை. வேலைக்கு தாமதமாக வருகிறான், இவன் காரணமாக மற்ற கூலியாட்களை எங்களால் சரியாக வேலை வாங்கமுடியவில்லை - அவனையும் கண்டிக்க மனம் வரவில்லை - தண்டிக்கவும் மனம் வரவில்லை, நான் கடினமாக நடந்துக்கொண்டால் அவன் பின்வாங்கிப்போவானோ என்று அஞ்சுகிறேன். உங்கள் ஆலோசனையை கூறுங்கள்.

கேள்வி: CSI & LUTHERAN சபைகளின் பணக்கொள்ளை, ஆலய நிலம் விற்றல் ஆகியவைகளை செய்யும் பிஷப்மார்களுக்கு எதிராக மாநில அளவில் போராட்டம் நடத்தினால் என்ன?

கேள்வி: Sleeveless (கையில்லாத ஜாக்கெட்) அணிவது பாவமா? உஷ்ண காலத்தில் அப்படிப்பட்ட உடுப்புகள் அணிவது சரீரத்துக்கு சவுகரியமாக இருக்கிறதே, அது ஆரோக்கியதுக்கு நல்லதுதானே? டென்னிஸ் விளையாடும் பெண்கள் அப்படி அணிகிறார்களே? அது தவறில்லையா?

கேள்வி: திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்தவரும், தமிழ் இலக்கணத்தை தமிழர்களுக்கே முதலில் எழுதி கற்று கொடுத்த வெளிநாட்டினவரான வீரமாமுனிவர் என்று அழைக்கப்படுபவரின் இயற்பெயர் என்ன?

கேள்வி: நம் சபைகளுக்கான தீர்க்கதரிசனம் என்னவாக இருக்கும்? இப்படி நான் கேள்வி கேட்க காரணம், இன்று அவரவர்கள் தங்களை தீர்க்கதரிசிகள் என்று கூறிக்கொள்கிறார்களே உலகத்தின் முடிவு வந்துவிட்டதோ?

கேள்வி: கனடா தேசத்தில் உள்ள பெரும்பாலான பாஸ்டர்கள் ஜெர்மனியிலும், இலங்கையிலும் உங்கள் பிரசங்கம் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்களும், ஊழியத்துக்கு ஒப்பு கொடுத்தவர்கள். சிலரை கனடாவில் பாஸ்டராக ஊழியராக, மேய்ப்பராக நீங்களே அபிஷேகம் செய்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று அறிவேன். ஆனால் அந்த பாஸ்டர்கள் உங்களோடு ஆரம்பத்தில் கொண்டிருந்த அன்பும் தொடர்பும் இப்போது உங்களோடு இல்லையே ஏன்?

கேள்வி: கனடா நாட்டில் ஒரு பல்கலைக்கழகத்தில் மாணவர் மத்தியில் தனி நபர் பாதுகாப்புக்குறித்து TORANTO நகர காவல்துறை அதிகாரி மிச்சேல் சாங்குயினிட் அவர்கள் பேசும் போது அவர் குறிப்பிட்ட கருத்து உலகம் முழுதுவம் உள்ள பெண்களை போர் கொடி தூக்கவைத்துள்ளது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

கேள்வி: உங்களுக்கு பரலோகத்தையோ, தேவ தூதர்களையோ இங்கிருந்து பார்க்க பிடிக்காதா? அப்படிப்பட்ட ஆனந்த அனுபவத்தை இந்த உலகத்திலேயே அனுபவிக்க உங்களுக்கு ஆசையில்லையா? ஒருவேளை உங்களுக்கு அந்த ஆசையில்லை என்றால் அப்படிப்பட்ட அனுபவம் பெற்ற ஊழியர்களை நீங்கள் குறை சொல்ல கூடாதல்லவா?

கேள்வி: இரட்சிக்கப்பட்ட ஒருவர் தன் மரண நேரத்தில் நான் மரித்தால் தன்னைப் புதைக்கக்கூடாது என்றும், தன் சரீரத்தை எரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சபையினரும், எங்கள் மெத்தடிஸ்ட் சபை போதகரும், அவர் குடும்ப உறவினர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்து எரித்துவிட்டனர். இவர்கள் செய்தது சரியா? மெத்தடிஸ்ட் பாஸ்டர்மார் அதற்கு எப்படி சம்மதம் தெரிவிக்கலாம்?

கேள்வி: உங்களுக்கு AOG சபையின் மீது திடீரென்று இத்தனை வெறுப்பு உண்டாக காரணம் என்ன?

சபை பாஸ்டர்களுக்கான செய்தி
மேய்ப்பனாயிராதவனும்
யோவான் 10:12
தேவ எச்சரிப்பின் செய்தி
நல்ல மேய்ப்பன் (பாஸ்டர்)
முன்கோபம்
தகுதியில்லாத மூப்பர்கள்
தற்பெருமை
வெளிநாட்டு ஊழியம்
கள்ள தீர்க்கதரிசனம்

அமெரிக்கா - ஜெர்மனி - பிரான்ஸ் வெளிநாட்டு ஊழியங்கள்
அமெரிக்காவில் என் ஊழியங்கள்
Tamil United Church of Christ(CHICAGO)ல்
நடந்த தியான கூட்டங்கள்
மலையாள பாஷை கூட்டம்
சிக்காகோ நகரில் உள்ள CHRIST CHURCH-ல் நடந்த கூட்டம்
(USA) ORIGAN மாநில கூட்டங்கள்
ஜெர்மனியில் என் கூட்டங்கள்
பிரான்ஸில் என் கூட்டங்கள்
France பெந்தேகோஸ்தே சபை கூட்டங்கள்

ஜெப வேண்டுகோள்
Dr.சாம்கமலேசன் அவர்கள் மரண ஆபத்தை கடந்தார்

மேலும் படிக்க http://jamakaran.com

Address:
Dr.PUSHPARAJ
89, Majeeth Street,
Old Suramangalam,
Salem-636 005.
Tamil Nadu. INDIA.
Phone:+91-427-2387499
Fax:+91-427-2386464
E-mail:
drpushparaj@jamakaran.com
jamakaran@yahoo.com

Monday, November 07, 2011

கள்ளரைப் போல நடத்தப்பட்ட தேவமனிதர்கள்

இந்தியாவில் சுகபோகமாக ஹாயாக சுற்றிவந்து கொண்டிருக்கும் கிறிஸ்தவ நண்பர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையின் செய்தி. எங்கோ இறுகிக்கொண்டிருக்கும் கயிறு நாளை நம் கழுத்தையும் நெறிக்கலாம். உஷாராக இறைவனிடம் பிரார்திக்க இப்போதே தொடங்கிவிடுவது நல்லது. அமெரிக்காவைச் சேர்ந்த தேவ ஊழியர் வில்லியம் லீ (William Lee) கேரளாவில் ஒரு இசைப்பெருவிழாவில் (Musical Splash 2011) கலந்து கொண்டதற்காக ஒரு திருடனைப்போல கைது செய்யப்பட்டு சிறையில் பல குற்றவாளிகளோடு மூன்று நாட்கள் அடைக்கப்பட்டிருக்கிறார். சுற்றுலா விசாவில் வந்த அவர் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டாராம் இதுதான் இந்திய அரசு கொடுத்த விளக்கம். இனிமேல் வில்லியம் லீ இந்திய மண்ணில் கால்வைக்கக் கூடாது என தடையும் இட்டிருக்கிறார்கள். நாம் மிகவும் விரும்பி கேட்கும் பாடகர் ரான் கெனோலியும்(Ron Kenoly) இந்த கொச்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. அவருக்கும் இந்திய அரசு ஆயுட்கால தடைவிதித்துள்ளது.
வெறுமனே கிறிஸ்தவ பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்ற ஒரே காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்து கேவலப்படுத்திய இந்திய அரசாங்கம், ஆசிரமங்களுக்கும் யோகிகளிடமும் செல்லும் வெளிநாட்டவர்களை மட்டும் விட்டு வைப்பது எந்த வகையில் நியாயமோ. உனக்கொரு சட்டம். எனக்கொரு சட்டம். எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இது போன்ற நெகடிவ் செய்திகள் பலரையும் சென்றடைந்து பரவிவிடாமல் இருக்க கவனமாக பார்த்துக்கொள்வோம்.
இதனால் யாரும் இதுபோன்ற பிரச்சனைகளுக்காக ஜெபிக்கவும் மாட்டார்கள். நாமும் வீழ்ந்துகொண்டேயிருப்போம் நாமறியாமலே.
William Lee Ministries
Ron Kenoly Ministries

மாற்கு 14:48 கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;

மாற்கு 13:9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனை சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள்.

http://www.ucanews.com/2011/10/19/judge-confirms-evangelist-deportation/
http://www.news-journalonline.com/news/local/east-volusia/2011/10/22/evangelist-home-in-ormond-beach-after-being-jailed-in-india-for-preaching-without-proper-visa.html

Thursday, November 03, 2011

ஆசீர்வாதம் நவம்பர் 2011 பத்திரிகை டவுண்லோட்

உள்ளடக்க கட்டுரைகள்

  • மிஷனரிப் பணிக்குக் கொடுப்போம்! - R.ஸ்டான்லி
  • ஆசீர்வாத இளைஞர் இயக்கம் - துவக்கம்,நோக்கங்கள்,செயல்கள்
  • குப்பையிலிருந்து... - ஆஷீஷ் தீப், மிஷனரி
  • அங்கிள் ஜான் ஸ்டாட் - E.L.மதன்சிங்
  • ஆத்துமாதாயம் - பலவீனமான என்னையும்...! - திருமதி ஜெமிமா சுகிர்தராஜ்,பாளையங்கோட்டை
  • தேவன் பேசுவது அர்த்தமில்லாமல் தெரியும்போது--- - திருமதி ஜெமிமா ராஜேஷ்,திருச்சி
  • பணிக்களச் செய்திகள்


ஆசீர்வாத இளைஞர் இயக்கம்
சர்ச் காலனி
வேலூர் 632 006,இந்தியா
Tel:00 91 416 2242943, 2248943
www.bym-india.org

You can also transfer money online:
SB A/C No.10545849472
State Bank of India
Siruthozhil Branch, Vellore 632 006
Branch Code: 007274
IFSC Code:SBIN 0007274


மேலும் படிக்க பத்திரிகையை டவுண்லோடு செய்யவும்
Blessing Tamil Magazine November 2011 PDF Download Link டவுண்லோட் லிங்க்

Thursday, October 06, 2011

இப்படியும் ஊழியம் செய்யலாம்

டெக்சாஸ் மாகாணத்தில் கிவிக் கார் எனும் ஆட்டோமொபைல் ஒர்க் ஸாப் வைத்திருப்பவர் சார்லி விட்டிங்டன். இவர் வொர்க் சாப்பில் யோவான்:3:16-ரை வாசித்து காண்பித்தால் போதும் ஆயில் சேஞ்ச் செய்யும் போது வழக்கமான விலையிலிருந்து 15 டாலர்கள் வரை தள்ளுபடி தருவதாக அறிவித்து கூப்பன்கள் வெளியிட்டு உள்ளார். வியாபாரத்துக்கு வியாபாரமும் ஆச்சுது, நற்செய்தியை மக்களுக்கு சொன்னதும் ஆச்சுது என்பது அவர் எண்ணம்.வழக்கம் போல சில எதிர்ப்புகள் வந்தன. ஆனாலும் அவர் விடுவதாக இல்லை “என் விசுவாசத்தில் நான் உறுதியாய் நிற்கிறேன் அவ்வளவுதான்” என்கிறார் சார்லி. எதாவது சட்டத்தை காட்டி பயமுறுத்தி அதற்கு தடைபோடலாமென முயற்சித்தார்கள். அதற்கான வழி ஒன்றும் இல்லை என அட்டர்னி ஒருவர் தெரிவித்து விட்டார். அந்த அட்டர்னி வேடிக்கையாக கூறும்போது “பைபிளை படித்தால் பல வெகுமானங்கள் கிடைக்கும் என கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் ஆயில் சேஞ்சின் போது டிஸ்கவுண்டும் கிடைக்கும் என்பதை கடவுள் அர்த்தப் படுத்தவில்லை என நம்புகிறேன்” எனக் கூறினார்.

யோவான்:3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

http://religion.blogs.cnn.com/2011/10/01/quote-john-316-for-an-oil-change/

Friday, September 30, 2011

இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டும்


ஆர அமர இருந்து இந்த அழகான அகாபே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நோட்டீசை உருவாக்கியவர்கள் மேலே ”கர்த்தருக்கு ஸ்தோத்திரம்”மோ அல்லது ”Praise the Lord”டோ அல்லது ஒரு வேத வசனமோ போட்டிருக்கலாம். தோதான வேத வசனம் கிடைக்கவில்லை போலிருக்கிறது. எட்டு பாஸ்டர்மார்களும் ஒரே மனதாக இந்த விசயத்திலாவது ஒன்று கூடுவது நல்ல விசயம். நல்ல நோக்கத்துக்காக நாலும் செய்யலாம் என்பார்கள். சிறார்களையும், இளைஞர்களையும் எளிதில் சென்றடைய இது ஒரு நல்ல வழி. ஆனாலும் அந்நோக்கம் இந்த கைப்பிரதியில் கூட தெரியவில்லை என்பது தான் சோகம். இளம் தலைமுறையினருக்கு அதுதான் பிடிக்கிறது வென இக்காலத்தில் பலதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். ராப் இசையும் பாப் இசையும் கிறிஸ்தவத்தில் வலிய புகுத்துவது எந்த அளவுக்கு நல்லதோ தெரியவில்லை. ஏதோ கத்தி பாடுகிறார்கள் ஆடுகிறார்கள் ஆனால் வார்த்தைகள் ஒன்றும் கேட்பதுமில்லை புரிவதும் இல்லை.சில இசைகள் பிசாசுக்கே உரியது நாம் அதில் தெய்வீகத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் விளையாட்டு நல்லது. சரீரத்துக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது. ஸ்போர்டிவ்வாக எடுத்துக்கொள்வதை கற்றுக்கொள்வார்கள். அப்படியே இப்படி கிரிக்கட் ஆடியாவது திருச்சபைகள் இடையே சகோதரத்துவம் வளர்ந்தால் ரொம்ப நல்லது.
ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்.(I கொரிந்தியர் 10:31)
எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.(I கொரிந்தியர் 9:22 )
இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விட்டுவிடாதிருக்கவேண்டுமே.(லூக்கா 11:42)