Tuesday, April 30, 2013

சோதோம் கொமாரா ரிட்ட‌ன்ஸ்


"உங்க‌ளை நினைத்தால் எங்க‌ளுக்கு பெருமையாக‌ இருக்கிற‌து ஜேச‌ன் காலின்ஸ்!. ந‌ம‌து நாட்டில் இதொரு மிக‌ப்பெரிய‌ முன்னேற்ற‌ம்" என‌ அமெரிக்க‌ முத‌ல் பெண்ம‌ணி மிச‌ல் ஒபாமா த‌ன‌து டிவிட்ட‌ர் ப‌க்க‌த்தில் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

என்ன‌மோ ஜேச‌ன் காலின்ஸ் மிக‌ப்பெரிய‌தொரு அரிய‌ சாத‌னையை ப‌டைத்துவிட்டார், வ‌றுமையை ஒழிக்க‌ வ‌ழி க‌ண்டு பிடித்து விட்டார். தீவிர‌வாதிக‌ளின் ச‌தியை ஒட்டு மொத்த‌மாக‌ முறிய‌டித்து விட்டார் என‌ நினைக்க‌ வேண்டாம். த‌ன்னை ஒரு கே (Gay) என‌ அவ‌ர் அறிவித்துவிட்டாராம்.அத‌ற்கு தான் இந்த‌ ஆர்பாட்ட‌ம்.வேதாக‌மமோ அதை "ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து" என்கிற‌து (ரோமர்:1:27)

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னின் ம‌க‌ள் வாழ்த்துத‌ல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிப‌ர் பில் கிளிங்ட‌னோ ஒரு ப‌டி முன்னே போய் த‌ன‌து வாழ்த்துசெய்தியில் இவ்வாறாக‌ எழுதுகிறார்.

Clinton wrote. "It is also the straightforward statement of a good man who wants no more than what so many of us seek: to be able to be who we are; to do our work; to build families and to contribute to our communities."

என்ன‌து "to build families"சா
என்ன‌ப்பா ஆச்சு இவ‌ங்க‌ளுக்கு? ந‌ல்லாதானே இருந்தாங்க‌?
ஆணோடே ஆண்,பெண்ணோடே பெண் இருந்து அவலட்சணம் செய்து விட்டு குடும்ப‌த்தை எப்ப‌டி க‌ட்டுவ‌துப்பா? ந‌ல்லா இருக்குதே க‌தை? எப்ப‌டி இவ‌ர்க‌ளையெல்லாம் குருடாக்கியிருக்கிறான்யா அவ‌ன்? 
இவ‌ர்க‌ளுக்கெல்லாம் விண்ண‌ப்ப‌ம் ஏறெடுப்ப‌துவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே.

Thursday, April 04, 2013

ஆழ்க‌ட‌லில் எறிந்துவிட்டார்




உலக‌ ச‌முத்திர‌ங்க‌ளிலேயே மிக‌ ஆழ‌மான‌ ப‌குதி எதுவென்று தெரியுமா? ஜ‌ப்பானுக்கு அ‌ருகே ப‌சுபிக் பெருங்க‌ட‌லிலுள்ள‌ ம‌ரியானாஸ் டிரெஞ்ச் ‌என்ப‌து தான் அது.இத‌ன் ஆழ‌ம் 35,827 அடிக‌ள். அதாவ‌து இந்த‌ ஆழ‌த்தில் எவ‌ரெஸ்ட் சிக‌ர‌த்தையே அலாக்காக‌ தூக்கி போட்டு விட‌லாமாம். ஏனென்றால் எவ‌ரெஸ்டின் உய‌ர‌ம் வெறும் 29,035 அடிக‌ள் ம‌ட்டுமே. உல‌க‌ம‌கா சிக‌ர‌த்தையே விழுங்கிக் கொண்டு அத‌ற்கான‌ அடையாள‌மே இல்லாம‌ல் அமைதியாக‌ கிட‌க்கும் இந்த‌ ம‌ரியானாஸ் ஆழ‌ம். 


அன்ப‌ரே! உங்க‌ள் பாவ‌ங்க‌ள் எவெரெஸ்ட் ம‌லைய‌த்த‌னையாய் குவிந்திருக்கிற‌தே என‌ வ‌ருந்துகிறீர்க‌ளா? வேதாகம‌ம் மீகா:7:19 ல் சொல்லுகிற‌து க‌ட‌வுள் "நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்" என்று. உங்க‌ள் பாவ‌ங்க‌ளும் அக்கிர‌ம‌ங்க‌ளும் எவெர‌ஸ்ட் சிக‌ர‌ம் போல் குவிந்திருந்தாலும் அதை சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு காணாம‌ல் போக‌ச்செய்ய‌ கர்த்த‌ர் ஒருவ‌ரால் ம‌ட்டுமே முடியும். அவ‌ர‌ண்டை அண்டிக்கொள்வாயா? அவ‌ர் அருளும் ச‌மாதான‌த்தை பெற்றுக்கொள்வாயா?

Thursday, March 28, 2013

ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா


ஒபாமா பார்த்து பிர‌மித்த‌ பெட்ரா
வேதாக‌ம‌த்தில் ஏதோம் என்றொரு நாடு குறிப்பிட‌ப்ப‌டுவ‌துண்டு.
இந்த‌ நாட்டின் பிர‌தான‌ ந‌க‌ர‌மாக‌ இருந்த‌து தான் பெட்ரா. இப்ப‌டி
ஒரு‌ நாடே கிடையாது.இது ஒரு க‌ற்ப‌னை பிர‌தேச‌ம்.
இதிலிருந்தே வேதாக‌ம‌ம் ஒரு பொய் என‌ தெரிகிற‌து என‌
ஒரு கூட்ட‌த்தார் ஒரு கால‌த்தில் வேத‌த்தை அவ‌தூறு செய்து
கொண்டிருந்தார்க‌ள். புதைந்து போய் கிட‌ந்த‌ இந்த‌ பெட்ரா
ந‌க‌ர‌த்தை 1812ல் சுவீட‌னை சேர்ந்த‌ ஒரு யாத்ரீக‌ர் Johann Burckhardt
என்ப‌வ‌ர் க‌ண்டுபிடித்தார்.அத‌ன் பிற‌கு அவ‌ர்க‌ள் எல்லோரும்
வாய் அடைத்துப்போயின‌ர்.வேதாக‌ம‌ம் சொல்வ‌தெல்லாம் உண்மை
என‌ மீண்டும் ஒரு முறை நிரூபிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த பெட்ரா நக‌ர‌ம்
முழுக்க‌ முழுக்க‌ பாறைக‌ளை குடைந்தே செதுக்கி க‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ ஆச்ச‌ரிய‌ அதிச‌ய‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கிய‌து. ஆனால் வேதாக‌ம‌ம்
முன்னுரைத்த‌ப‌டி இந்ந‌க‌ர‌ம் பாழாய்போன‌து.

எரேமியா:49:17 சொல்கிற‌து "ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் ...பிரமித்து" ‌.ஆமாங்க‌ய்யா..ஒபாமா கூட‌ பார்த்து பிர‌மித்துப்போனார்.

Edom shall be a desolation: every one that goeth by it shall be astonished. Jeremiah 49:17

Thursday, March 21, 2013

ஜெபிக்க‌ சொல்லும் நாசா


பூமிக்கு மிக‌த்தொலைவிலுள்ள‌ கோள்க‌ளையெல்லாம் வ‌லிமை மிக்க‌ விண்நோக்கிக‌ள் மூல‌ம் க‌ண்டு ஆராயும் விஞ்ஞானிக‌ளுக்கு பூமிக்கு மிக‌ அருகில் பூமியை தாக்க‌க்கூடிய‌ தொலைவிலுள்ள‌ விண்க‌ல்க‌ளை க‌ண்டுபிடிப்ப‌து மிக‌ சிர‌ம‌மாக‌ இருக்கிற‌தாம். அப்ப‌டியே பூமியை தாக்க‌ வ‌ரும் விண்க‌ற்க‌ளை க‌ண்டுபிடித்துவிட்டாலும் கூட‌ இப்போதைய‌ தொழில்நுட்ப‌த்துக்கு ந‌ம்மால் ஒன்றும் செய்ய‌ இய‌லாது.அதை வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்க‌ வேண்டும் என்கிறார்க‌ள். உதார‌ணமாக‌ இன்னும் மூன்று வார‌த்தில் ஒரு எரிக‌ல் நியூயார்க் ந‌க‌ரை தாக்க‌போகுது எனக்கொண்டால் ந‌ம்மால் க‌ட‌வுளிட‌ம் வேண்டிக்கொள்வ‌தை த‌விர‌ வேறெதுவும் செய்ய இய‌லாது என‌ அமெரிக்க‌ விண்வெளி ஆராய்ச்சி மைய‌ த‌லைவ‌ர் தெரிவித்துள்ளார். அவ‌ர் சொல்வ‌தும் ச‌ரிதான் எரிக‌ல்க‌ளை ந‌ம் இஷ்ட‌த்துக்கும் திருப்பிவிட‌ நாம் என்ன‌ க‌ட‌வுளா? க‌ர்த்த‌ர் யோபுவிட‌ம் கேட்கும் போது "துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?" என‌ கேட்கிறார் (யோபு:38:32).


நாம் ம‌ண் அல்ல‌வோ?(சங்:103:14).கர்த்தர் தான் ந‌ம்மை காக்க‌ வேண்டும்.க‌ர்த்த‌ர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா.(சங்:127:2)

Thursday, March 14, 2013

இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்


"ஆத்துமாக்க‌ளின் இரட்சிப்பை இழிவாக‌ வ‌ஞ்சித்துக் கொண்டிருக்கும் போப்பாண்ட‌வ‌ரின் ப‌த‌வி ஒரு உண்மையான‌ நிஜ‌மான‌ அந்திகிறிஸ்துவின் ப‌த‌வி என்ப‌தை நாங்க‌ள் இங்கே குற்ற‌ஞ்சாட்டுகிறோம்.என்னைப் பொருத்த‌வ‌ரை போப்புக்கு கீழ்ப‌டிவ‌தும் அந்திக்கிறிஸ்துவுக்கு கீழ்ப‌டிவ‌தும் ஒன்று தான்." - ‍மார்ட்டின் லூத‌ர் (ஆக‌ஸ்ட் 18,1520)

அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி
இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள் (1 யோவா:2:18)


“We here are of the conviction that the papacy is the seat of the true and real Antichrist, against whose deceit and vileness all is permitted for the salvation of souls. Personally I declare that I owe the Pope no other obedience than that to Antichrist.” - Martin Luther (August 18,1520)

Taken from The Prophetic Faith of Our Fathers, Vol. 2., pg. 256 by Le Roy Edwin Froom.
http://docs.adventistarchives.org//docs/PFOF/PFOF1948-V02.pdf

என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். தேவனே, உமக்கு நிகரானவர் யார்?.(ஏசாயா 48:11,சங்கீதம் 71:19)