Friday, September 23, 2011

இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்

1.இஸ்ரவேலின் வம்சத்தினர் தேசத்தை மீண்டும் ஆண்டுகொள்வர் என ஆமோஸ் கிமு 750 வாக்கில் முன்னுரைத்தது அப்படியே கிபி.1948-ல் நிறைவேறியது.ஆமோசின் இறுதி வார்த்தைகளை கவனியுங்கள் “நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” அப்படியே ஆகும்.ஆமேன்.
ஆமோஸ் 9
14. என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
15. அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


2.மீண்டும் யூத இனம் புத்துயிர் பெற்றுவரும் என கிமு 593-571 இடையே எசேக்கியேல் உரைத்தது அப்படியே நடந்தது.நாசிக்களால் நடத்தப்பட்ட ஹோலோகோஸ்ட (Holocaust) எனப்படும் யூதப்படுகொலையின் போது ஆறு மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போது யாருமே யூதர்கள் இப்படி மீண்டும் புத்துயிர் பெற்று வருவார்கள் என நம்பவில்லை. இப்படி உலர்ந்து போன எலும்புகள் மீண்டும் உயிர் பெற்று வந்தது முழுக்க முழுக்க தெய்வச்செயலே.
எசேக்கியேல் 37
10. எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்.
11. அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள்.
12. ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்குவரவும்பண்ணுவேன்.
13. என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
14. என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


3.ஒரே நாளில் இஸ்ரேல் தேசம் உருவாகும் என ஏசாயா தீர்க்கதரிசி கிமு 701-681 வாக்கில் உரைத்தது 1948 மே-14ல் நிறைவேறியது.
ஏசாயா 66
7. பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள்.
8. இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும் தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது.


4.யூதா,இஸ்ரேல் என முன்பு இராஜாக்கள் காலத்தில் இரண்டாக பிரிந்திருந்த தேசங்கள் ஒருங்கிணைந்து ஒரே தேசமாகும் என எசேக்கியேல் கிமு593-571-களில் முன்னுரைத்திருந்தார். அது அப்படியே நிறைவேறியது.
எசேக்கியேல் 37
21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,
22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை: அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.


5.பல தேசங்களிலிருந்து யூதர்கள் திரும்பி தங்கள் சொந்த தேசத்துக்கு வருவார்கள் என எரேமியா கிமு626-586 வருடங்களுக்கு இடையே உரைத்தது அப்படியே நடந்தது.
எரேமியா 16
14. ஆதலால், இதோ, நாட்கள்வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல்,
15. இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும் தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அதையே எசேக்கியேலும் 593-571 BC வாக்கில் தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார்.
எசேக்கியேல் 34
13. அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின் மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.


6.இஸ்ரேல் தேசத்தை தேவன் தன் மந்தையைக் காக்கும் வண்ணமாக அதைக் காப்பார் என எரேமியா முன்னுரைத்தது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது. சூழ்ந்திருக்கும் எல்லா தேசங்களும் அதற்கு எதிராக பல முறைவந்தும் அந்த சிறிய தேசத்தை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆமேன். கர்த்தர் காக்கின்றார்.
எரேமியா 31
10. ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள்


7.மீண்டும் இஸ்ரேல் தேசத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பார் என ஏறத்தாழ கிமு 1400 -ல் எழுதப்பட்டது.அப்படியே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வறண்ட நிலமாக கிடந்த இந்நிலத்திலிருந்து பல நாடுகளுக்கும் இப்போது பல்வேறு பொருட்களும், தொழில்நுடபங்களும் ஏற்றுமதியாக்கிக்கொண்டிருக்கின்றது.
உபாகமம் 30
3. உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
4. உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
5. உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.


இஸ்ரேலின் தேவன் இன்னும் ஜீவிக்கின்றார் என்பதற்கு இன்றைய இஸ்ரேல் தேசமே சாட்சி.

3 comments:

  1. because one and living GOD he is holyisreal there is no other GOD THEN JESUS

    ReplyDelete
    Replies
    1. Yes,Our JESUS is only one God in the World

      Delete
    2. Only one LORD,He is Our GOD JESUS

      Delete