Thursday, June 09, 2011

கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...

அமெரிக்காவின் பிரபலமான பத்திரிகைகளின் வரலாற்றை இப்படியாக வேடிக்கையாக கூறுவார்கள்.

  • ஆரம்பத்தில் 1960,70-களில் லைப் (Life) எனப்படும் பத்திரிகை மிகவும் புகழ்பெற்றிருந்தது.லைப் என்றால் அதின் அர்த்தம் சகல உயிரினங்களும் அதில் அடங்கும் என்பதாகும்.
  • 1980-களில் பீப்புள் (People) எனப்படும் பத்திரிகை மிகவும் பாப்புலர் அடையத் தொடங்கியது. பீப்புள் என்றால் மக்கள் என்று பொருள்.மேலே சொல்லப்பட்ட சகல உயிரினங்களும் போய் மக்கள் மட்டும் என்றானது.
  • 1990-களில் (US) எனும் பத்திரிகை முன்ணனிக்கு வந்தது. அஸ் என்றால் நமது என்று அர்த்தம்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமது மட்டும் என்றானது.
  • 2000-த்தில் (Self) எனும் பத்திரிகை திடீரென பிரபலமாகி முன்னுக்கு வந்தது.செல்ப் என்றால் எனது என்று பொருள்.சகல உயிரினங்களும் போய், மக்களும் போய், நமதும் போய் இப்போது எனது மட்டும் என்றாகிவிட்டது.
இது ஒரு வேடிக்கையான ஒப்பீடேயானாலும் இது ஒரு முக்கியமான இன்றைய மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவரவர் அவரவர் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு செல்லும், வேறு யாரையும் பற்றி கவலைப்படாத இன்றையமக்களின் சுயநலம் அதாவது selfish எனும் நிலையைக் காட்டுகிறது.பரிசுத்த வேதாகமும் இதைத்தான் II தீமோத்தேயு 3-ம் அதிகாரத்தில் இப்படியாக சொல்கிறது. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும்,வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும்,.....இருப்பார்கள்; என்கிறது.

1 comment:

  1. URGENT - PLEASE HELP ANY OF YOU TO CONVERT THIS TESTIMONY INTO TAMIL

    SEE THE LINK
    http://www.divinerevelations.info/

    The Kingdoms of Heaven & Hell, and the Return of CHRIST
    by Angelica Zambrano (aka.23 Horas Muerta)

    ReplyDelete