Monday, August 10, 2015

அது #கோபமாக பாக்குதாம். #நியூயார்க் நகரில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தில் பிரமாண்டமாக படம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.ரொம்ப முக்கியம்.வனவிலங்குகளை பாதுகாப்பதற்கும் அதற்கும் என்னங்கடா சம்பந்தம். #வேதாகமம் சொல்லுகிறது... ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த #கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு #ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன்.வெளி 12:12


Thursday, August 06, 2015

வேறே பூமிகள் உண்டு, அங்கே புத்திசாலித்தனமான ஏலியன்களும் இருக்கலாம் என வாட்டிகன் முதல் இப்போது எல்லோருமே ஒத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் கூட பூமி போன்றதொரு புதிய கோள் கண்டுபிடிப்பு என செய்திகள் வெளியாகின.உயிரினங்கள் வாழ தகுதியுடன் பூமியை போன்று 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு எனவும் செய்திகள் வெளியாகின. இந்த கடைசிகாலத்தில் ஏலியன்கள் உண்டு என உலகத்தை நம்ப வைப்பதுவும் பிசாசின் ஒரு திட்டமே.அப்போது தான் கிறிஸ்துவின் பிள்ளைகள் திடீரென ஒருநாள் எடுத்துக் கொள்ளப்படும்போது அதை "வெளிக்கிரகவாசிகள் பூமியின் மீது திடீர் முற்றுகை. பல்லாயிரக் கணக்காணோரை காணோம்" என செய்திகளாக‌ வெளியிட்டு உலகை நம்பவைத்து ஏமாற்றமுடியும். அதற்காகவே பூமியை இப்போதே தயாராக்கிக் கொண்டிருக்கின்றான். இது போன்றதான புதிய பூமிகள், வேற்றுகிரக வாசிகள் செய்திகள் இனி அதிகமாகவே வெளிவரும். பூமியின் இறுதியுத்தமும் கூட பூலோக வாசிகளுக்கும் ஏலியன்களுக்கும் இடையேதான் இருக்கும் என வேதம் சொல்லுகிறது (வெளி:19:19). இதில் விசித்திரம் என்னவென்றால் பூலோகவாசிகள் என ஒன்றாக குழுமி The New World Order பேசும் நாம் தான் பூமிக்கு ஏலியன்கள். ஏலியன் என இந்த உலகத்தான் பேசும் நம் தேவன் தான் இப்பூமிக்கு ஒரிஜினல் சொந்தக்காரர். வேதம் சொல்லுகிறது பூமியும் அதின் நிறைவும், கர்த்தருடையது. Iகொரி:10:26


Tuesday, August 04, 2015

கனியோடு விதைகளையும் கொடுத்தார் கடவுள். ஆனால் சுயநலமாய் மனிதன் இப்போதெல்லாம் கனிகளை மட்டும் கொடுத்து விட்டு விதைகளை தன்னிடமாய் வைத்துக்கொண்டான். வேதாகமம் சொல்லுகிறது "இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது" என்று.கனியோடு விதைகளையும் கொடுத்து அதன் மூலம் பூமியை கனிதரும் விருட்ச‌ங்களால் நிறைப்பது தான் கடவுளின் திட்டம்.தேவன் அது நல்லது என்று கண்டார். ஆனால் சுயநலமிக்க மனிதனோ கனியை மட்டும் பணத்துக்காக விற்க‌ கற்றுக்கொண்டான். அதன் விதையை தன்னிடமாய் ஒளித்து வைக்கவும் கற்றுக்கொண்டான். என்ன பரிதாபம்.(ஆதியாகமம் 1:12,29)