Monday, August 18, 2014
கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - சீக்கிரம் தமிழகத்தில்
Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17
Labels:
Antichrist,
Bible Prophecy,
End Time News,
Revelation,
Tamil Nadu
Thursday, August 14, 2014
தப்பிய பூமி - இம்மட்டும் வா, மிஞ்சி வராதே
ஒரு மயிரிழையில் தப்பியது பூமி என இப்போது சொல்லுகிறார்கள். 2012ல் உண்டான சூரியப்புயல் கொஞ்சம் அவசரப்பட்டு ஒரு வாரம் முன்பே மட்டும் நடந்திருந்தால் பூமியில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்து போயிருக்கும் என்கிறார்கள். எலக்ட்ரானிக் கருவிகளெல்லாம் கருகிப்போயிருக்குமாம். இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என கட்டளையிடுவது நம் கர்த்தரன்றோ?. காலத்துக்கு முன்னே ஒன்றும் நடக்காது. எல்லாம் அதின் அதின் காலத்திலே நேர்த்தியாக நடக்கும். ஏனெனில் பூமி உண்டானதல்ல. உண்டாக்கப்பட்டது. இங்கு உண்டாக்கினவர் அறியாமல் ஒரு அணுவும் அசையாது.(யோபு 38:11)
Labels:
Earth,
End Time News,
Life,
Science
Wednesday, June 11, 2014
என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்
எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்கப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது.
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)
Labels:
Antichrist,
Bible Prophecy,
Church,
End Time News,
Revelation
Tuesday, June 10, 2014
அந்தரங்கத்தில் தொங்கும் பூமி
20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார். இப்படி பூமியின் அமைப்பு குறித்து தவறான பல்வேறு மூடநம்பிக்கைகள் முன்பு உலக முழுவதும் இருந்தன. ஆனால் வேதாகமம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7
Thursday, June 05, 2014
எத்தனை நட்சத்திரங்கள்?
வெறும் கண்ணால் நமக்கு பார்க்கத் தெரியும் நட்சத்திரங்கள் 9,000
அதுவே நல்லதொரு பைனாகுலரால் பார்வையிட்டால் 200,000
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டெலஸ்கோப் வாங்கி நோக்கினால் 15,000,000 (15 மில்லியன்)
பெரிய வான்வெளி ஆய்வுகூடங்களில் போய் ஆய்ந்து நோக்கினால் இதன் எண்ணிக்கை பில்லியன்கள் போகும்.
உண்மையிலேயே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதாம்?
நாம் இருக்கும் பால்வெளியில் மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளனவாம்.
இது போல எத்தனை பால்வெளிகள் உள்ளனவாம்?
170 பில்லியன் பால்வெளிகள்.
அப்போ எல்லா பால்வெளிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவாம்?
24 செப்டில்லியன்கள் என்கிறார்கள்.
அதாவது 1000000000000000000000000 நட்சத்திரங்கள்.
இதெல்லாம் நம் மூளைக்கு எட்டியவரையே.
ஆனால் உண்மையில் நாம் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எண்ணியே முடியாது என முடிக்கிறார்கள்.
வேதாகமம் சொல்லுகிறது கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார் என்று (சங்கீதம் 147:4).
என்ன மகத்துவமான தேவன் அவர்.
http://www.universetoday.com/102630/how-many-stars-are-there-in-the-universe/
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டெலஸ்கோப் வாங்கி நோக்கினால் 15,000,000 (15 மில்லியன்)
பெரிய வான்வெளி ஆய்வுகூடங்களில் போய் ஆய்ந்து நோக்கினால் இதன் எண்ணிக்கை பில்லியன்கள் போகும்.
உண்மையிலேயே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதாம்?
நாம் இருக்கும் பால்வெளியில் மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளனவாம்.
இது போல எத்தனை பால்வெளிகள் உள்ளனவாம்?
170 பில்லியன் பால்வெளிகள்.
அப்போ எல்லா பால்வெளிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவாம்?
24 செப்டில்லியன்கள் என்கிறார்கள்.
அதாவது 1000000000000000000000000 நட்சத்திரங்கள்.
இதெல்லாம் நம் மூளைக்கு எட்டியவரையே.
ஆனால் உண்மையில் நாம் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எண்ணியே முடியாது என முடிக்கிறார்கள்.
வேதாகமம் சொல்லுகிறது கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார் என்று (சங்கீதம் 147:4).
என்ன மகத்துவமான தேவன் அவர்.
http://www.universetoday.com/102630/how-many-stars-are-there-in-the-universe/
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்




