Friday, May 06, 2011

நரகம் உண்டா?

காந்தி நரகத்திலா இருக்கிறார்? அன்புமிக்க ஆண்டவர், மனதுருக்கம் கொண்ட நேசர் நரகம் என்று ஒன்றை படைத்திருப்பாரா? கருணை மிக்க கடவுள் தாம் படைத்த மக்களை நரகத்தில் இடுவாரா? என அமெரிக்காவில் ஒரு பாஸ்டர் கேள்வி எழுப்பி இருக்கிறார். நரகம் என்று ஒன்றே இருக்க முடியாது என்பது அவர் வாதம். இது குறித்து Love Wins என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் பாஸ்டர் ராப் பெல். இச்செய்தி டைம் பத்திரிகையில் அட்டைப்பட செய்தியாக இந்த ஏப்ரலில் வெளியானது.

இப்படி வேதத்தில் உள்ளதை உள்ளபடியாக போதிக்க வேண்டிய போதகர்மார்களே வழிமாறி திசை திரும்பி சுற்றும் காலம் இது. ஆனால் உலக மக்களோ நரகம் இருப்பதை இன்றும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒசாமாவின் மரணத்தையொட்டி ”ROT IN HELL" என டெய்லி நியூஸ் அட்டைப்பட செய்தி வெளியிட்டது.

இனி இந்த கள்ள போதகர்களின் வேலை கடினமாகிவிட்டது.நரகம் என்று ஒன்று இல்லவே இல்லை என மக்களுக்கு நிருபிக்கவேண்டியுள்ளது. இந்த தொல்லைகளையெல்லாம் கண்ட ஒரு வாசகர் டைம் பத்திரிகைக்கு எழுதினார் “நரகத்தை வர்ணிப்பது மிக எளிது.சுவிசேச கிறிஸ்தவர்களோடு நித்தியம் நித்தியமாக காலத்தை தள்ளுவது தான் அது”

God,Please let him have his heaven.Maranatha!!

மத்தேயு 25:30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்

1 comment:

  1. சரியாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். நரகம் இல்லை என்பது சாத்தானின் போதனையாகும். நரகம் இல்லாது விட்டால் என்ன பாவத்தையும் செய்யலாம். தேவன் தான் அன்பானவராயிற்றே. மன்னிப்புக் கேட்டால் போயிற்று என்று எண்ணுவோர் இருக்கின்றனர். இரசலின் யெகோவா சாட்சிகள். வேதமாணாக்களர் மற்றும் 7ம் நாள் அட்வாந்து சபையினர் போன்றோர் அத்தகைய கருத்துடையவர்கள்தான்.

    ReplyDelete